Published : 31 Oct 2021 03:53 PM
Last Updated : 31 Oct 2021 03:53 PM
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியைவிட டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றுசாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அபு தாபியில் இன்று நடக்கும் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்ெகட்டிலிருந்து அஸ்கர் விடை பெற உள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டனா அஸ்கர் ஆப்கன் இருந்து வருகிறார்.
தோனி தலைமையில் இந்திய அணி டி20 போட்டிகளி்ல் 41 வெற்றிகளைப் பெற்றநிலையில், அஸ்கர் ஆப்கன் தலைமையில் 42 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்ெகட் வாரியம் ட்வி்்ட்டரில் பதிவிட்ட செய்தியல் “ ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கன், டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்று,தோனியைவிட ஒரு வெற்றி கூடுதலாகப் பெற்றவர். அவர் நமிபியாவுக்கு எதிரானஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரின் எதிர்கால வாழ்வுக்கும், தேசத்துக்காக விளையாடியதற்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
அஸ்கர் ஆப்கன் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும் 114 ஒருநாள், 74 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக அறிமுகமான அஸ்கர் ஆப்கன் 2021ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார்.
டெஸ்ட் போட்டியில் 440 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,424 ரன்களும், டி20 போட்டிகளில்1,351 ரன்களும் அஸ்கர் சேர்த்துள்ளார். பந்துவீச்சில் டெஸ்ட் போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில்91 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் அஸ்கர் சாய்த்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT