Published : 25 Oct 2021 08:42 PM
Last Updated : 25 Oct 2021 08:42 PM
வரும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்த நிலையில் இரண்டு அணிகளும் அறிவிக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.
அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி குரூப் ஏலத்தில் எடுத்திருக்கின்றன.
இதற்கான டெண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது.
வருடத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றன. புதிய அணிகளுக்கான அடிப்படை விலை ரூ.2,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி குரூப் ஏலத்தில் எடுத்திருக்கின்றன.
ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடப் படுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல் அணிகள் ஆரம்பத்தில் இருந்தே உள்ளன. ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது.
2010 ஆம் ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டன. புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் சேர்க்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விளையாடின.
2011ல், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணி நிதி நிலைமையை காரணம் காட்டி விலகியது. இப்போது மீண்டும் 2 அணிகள் இணைக்கப்பட்டுள்ளதால் 2022 ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் இடம்பெறும்.
கொட்டப் போகும் வருமானம்:
போட்டி ஒளிபரப்பு உரிமம் ரூ.36 ஆயிரம் கோடிக்கு ஏலம் செல்லக்கூடும் என கருதப்படுகிறது. இதில் இருந்து பெரும்தொகை அணிகளின் உரிமையாளர்களுக்கு செல்லும். இதனால் அணிகளுக்கான ஏலம் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என பிசிசிஐ கணித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT