Published : 16 Oct 2021 05:32 PM
Last Updated : 16 Oct 2021 05:32 PM
ஐபிஎல் 14-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கான கொண்டாட்டம் இந்தியாவுக்கு தோனிவந்தபின்புதான் நடக்கும், அதுவரை காத்திருப்போம் என்று சிஎஸ்கேஅணியின் தலைமை நிர்வாக அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவி்த்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்தபின் தோனி தாயகம் திரும்ப முடியாத நிலையில் உள்ளார். டி20உலகக் கோப்பைப் போட்டியில் இ்ந்திய அணி்க்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஆதலால் துபாயில் நேற்று ஆட்டம் முடிந்தபின், ஓமன் புறப்பட்டு இந்திய அணியில் தோனி இணைய உள்ளார். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் வெற்றிக் கொண்டாட்டத்தை ஒத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகஅதிகாரி காசி விஸ்வநாதன் அளி்த்த பேட்டியில் கூறுகையில் “ சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இல்லாமல் வெற்றிக் கொண்டாட்டம் ஏதுமில்லை.
இந்தியாவுக்கு தோனி வரும் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் காத்திருப்போம். எம்எஸ் இல்லாமல் அணிக்குள் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது.
தோனி சிஎஸ்கே கேப்டன் பணியிலிருந்து ஏற்கெனவே மாறி இந்திய அணியின் மென்ட்டார்பணிக்கு மாறிவிட்டார். டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்து தோனி இந்தியாவந்தபின் சிறிய அளவிலான கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் “ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT