Published : 16 Sep 2021 11:22 AM
Last Updated : 16 Sep 2021 11:22 AM
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக சுழற்பந்துவீச்சாளர் மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக ஐபிஎல்டி20 தொடரின் 2-வது சீசனிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் குல்வந்த் கேஜ்ரோலியா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரின் 2-வது சீசன் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் துபாய்க்குவந்து 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குச் சென்றுவிட்டனர்.
இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்ததமிழக சுழற்பந்துவீச்சாளர் மணிமாறன் சித்தாரத்துக்கு காயம் ஏற்பட்டதால், அவர் 2-வது சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்றிருந்த கேஜ்ரோலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேஜ்ரோலியா இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்லார். கடந்த 2018ம் ஆண்டு, 2018ம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியில் கேஜ்ரோலியா இடம் பெற்று 5 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது துபாயில் மருத்துவமனையில் மணிமாறன் சித்தார்த் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்கு சித்தார்த் புறப்பட உள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் காகிசோ ரபாடா, நார்ட்ஜே, பென் வார்ஷூயஸ் ஆகியோர் துபாய் வந்துள்ளனர். இதில் தென் ஆப்பிரிக்க வீரர்கள், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பயோ-பபுள் சூழலில் விளையாடியதால் நேரடியாக பயோ-பபுள் டிரான்ஸ்பர் முறையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்தனர். இதில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் வார்ஷூயஸ் மட்டும் 6 நாட்கள் தனிமையில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT