Published : 01 Feb 2016 02:59 PM
Last Updated : 01 Feb 2016 02:59 PM
ஸ்பானிய கால்பந்து லீக் போட்டியில் இஸ்பான்யால் அணியை ரியால் மேட்ரிட் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது. இதில் ரியால் மேட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
12-வது நிமிடத்தில் அளிக்கப்பட்ட ‘ஸ்பாட் கிக்’ மூலம் முதல் கோலை அடித்த ரொனால்டோ பிறகு முதல் பாதி முடிவடையும் தருணத்தில் 2-வது கோலையும் பிறகு 2-வது பாதியில் 3வது கோலையும் அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
இந்த வெற்றி மூலம் ஜினடைன் ஜிடேன் பயிற்சியாளராக இருக்கும் ரியால் அணி 4 ஆட்டங்களில் 3-ல் வென்று வெற்றிநடை போட்டு வருகிறது.
மேலும் முதலிடத்தில் உள்ள அத்லெடிகோ மேட்ரிட் அணியை விட 1 புள்ளி மட்டுமே குறைவாக ரியால் தற்போது 2-ம் இடத்தில் உள்ளது.
ரொனால்டோவின் முதல் கோல் ஸ்பாட் கிக்காக அமைய, 2-வது கோல் அபாரமானது. எதிரணி வீரர்கள் மூன்று பேரைக் கடைந்து எடுத்துப் பந்தை எடுத்துச் சென்று அர்லாவ்ஸ்கியைத் தாண்டி இடது காலால் உதைத்து கோலை முடித்தார். பிறகு வலது புறம் ஒரு அருமையான ஆட்டத்தில் பந்தை எடுத்துவந்த ரொனால்டோ அதனை பென்ஸீமாவுக்கு அடிக்க அவர் தலையால் முட்ட அதில் வலுவில்லை, இதனால் கோல் வாய்ப்பு இல்லாமல் போனது.
பிறகு 82-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு அபார கோலை ரொனால்டோ அடிக்க ஹாட்ரிக் ஆனது. இந்த சீசனில் 19-வது கோலாகவும் இது அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT