Published : 19 Aug 2021 07:38 AM
Last Updated : 19 Aug 2021 07:38 AM
இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில் தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்ளிக்கு பதிலாக டேவிட் மலானும், வேகப்பந்துவீச்சாளர் சகிப் மெஹ்மூத் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லார்ட்ஸில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது வேகப்பந்துவீச்சாளர் மார் உட்டிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் மார்க் உட் குணமடைந்துவிடுவார் என்று இங்கிலாந்து வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதையடுத்து, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது
இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ள டேவிட் மலான் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் நகரில் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் கடைசியாக விளையாடினார். அதன்பின் 3 ஆண்டுகளாக டெஸ்ட் அணிக்கு டேவிட் மாலன் தேர்வு செய்யப்டவி்ல்லை.
பயி்ற்சியாளர் சில்வர்உட் கூறுகையில் “ டெஸ்ட் போட்டிக்கு தகுதியானவர் டேவிட் மலான். அனைத்துவிதமான போட்டிகளிலும் டேவிட் மலான் நன்றாக விளையாடும் திறமை படைத்தவர். லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3-வது டெஸ்டில் மலான் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்.
கடந்த ஜூன் மாதம் சசெக்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் யார்க்ஸையர் அணிக்காக ஆடிய மலான் 199 ரன்கள் சேர்்த்துள்ளார். மார்க் உட் விரைவில் தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்துவிடுவார். சகிஸ் மெஹ்மூத் முதல்முறையாக டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாகிறார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகப் பந்துவீசியதால் இந்த வாய்ப்பு மெஹ்மூத் பெற்றுள்ளார் ” எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி விவரம்:
ஜோ ரூட்(கேப்டன்) மொயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜோனத்தன் பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், சகிப் மெஹ்மூத், டேவட் மலான், கிரேக் ஓவர்டன், ஒலே போப், ஒலே ராபின்ஸன், மார்க் உட்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT