Published : 15 Aug 2021 01:07 PM
Last Updated : 15 Aug 2021 01:07 PM
விக்கெட் வீழ்த்தியபின் உதட்டில் கை வைத்து கொண்டாடுவது தன்னை விமர்சித்தவர்கள், வெறுப்பாளர்களுக்கு பதிலடியாகவே இதை செய்கிறேன் என இந்தியப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வதுடெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிஹ்ஸில் சிறப்பாகப் பந்துவீசிய சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் விக்கெட் வீழ்த்தும்போதெல்லாம், உதட்டில் விரல் வைத்து, “உஷ்” “ வாயைமூடுங்கள்” என்று உணர்த்தும் விதத்தில் கொண்டாடினார்.
லார்ட்ஸ் மைதானத்தில் முதல்முறையாக களமிறங்கிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது தனது வெறுப்பாளர்களுக்கான பதிலடி என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அளித்த பேட்டியில், “ விக்கெட் வீழ்த்திவிட்டு நான் உதட்டில் விரல் வைத்து “ உஷ்” என்ற ரீதியில் நான் கொண்டாடுவது என்னை விமர்சித்தவர்களுக்காகவும், வெறுப்பாளர்களுக்காகவும்தான். அவர்கள் வாயை அடைக்கத்தான் இந்த கொண்டாட்டம்.
என்னை கடுமையாக விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள்.
சிராஜால் இதைச் செய்ய முடியாது, சிராஜால் அதை செய்வது கடினம் என்று விமர்சித்தார்கள் என்னுடைய வெறுப்பாளர்கள். அவர்களுக்கு நான் எனது பந்துவீச்சின் மூலம்தான் பதில் அளிக்கமுடியும், அதில் மட்டும்தான் அவர்களுடன் பேச முடியும் என்று எண்ணினேன். அதனால்தான் விக்கெட் வீழ்த்தியபின், உதட்டில் விரல் வைத்து உஷ் என்று கூறி கொண்டாடுகிறேன்.
கே.எல்.ராகுல் மீது பாட்டில் கார்க்கை தூக்கி ரசிகர் எறிந்தசம்பவம் எனக்குத் தெரியாது,நான் அதை கவனிக்கவும் இல்லை. ஆனால், பார்வையாளர்கள் ராகுலை ஏதும் கடுமையாகப் பேசவில்லை.
இதுபோன்ற ஆடுகளங்களில் 4-வது வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கியது சரியான முடிவு, முக்கியமானதும்கூட. தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபின், நாங்கள் அனைவரும் பேசிவைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து பந்துவீசியது எங்களுக்கு உதவியாக இருந்தது. என்னுடைய திட்டம் என்பது எனது பந்துவீச்சில் நிலைத்தன்மை இருக்க வேண்டும்.
ரஞ்சிக் கோப்பையில் முதலில் நான் விளையாடிய போது, ஆடுகளத்தில் ஒருகுறிப்பிட்ட பகுதியில் பந்துவீசுவதை வழக்கமாக வைத்திருந்தேன் இதுதான் என்னுடைய திட்டம், வேறு ஏதும் முயற்சிக்கமாட்டேன். தொடர்ந்து பல்வேறு விதமாக நான் முயற்சித்தால், அது அணியைப் பாதிக்கும், என்னுடைய பந்துவீச்சையும் பாதி்க்கும்.
டெஸ்ட் போட்டியில் உதரிகள் மூலம் ரன் செல்வது வழக்கமானது. நடக்கத்தான் செய்யும், விளையாட்டில் அதுவும் ஒருபகுதிதானே. யாரும் உதரிகள் விட வேண்டும் என்ற நோக்கில் பந்துவீசவில்லையே.
ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், 2-வது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக ஸ்கோர் செய்வார்கள். அதிகமான ரன்களை அடித்து இலக்கு வைத்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுப்போம். என்ன நடக்கும் என பார்க்கலாம்.
இவ்வாறு சிராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT