Published : 14 Aug 2021 04:44 PM
Last Updated : 14 Aug 2021 04:44 PM
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் என்னை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியபோது எனக்கு மிகவும் வேதனையாகத்தான் இருந்தது. என்னுடைய மோசமான பேட்டிங்கிற்கு யாரையும் குறைகூறவிரும்பில்லை என்று இந்திய அணி பேட்ஸமேன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாரம்பரியம் கொண்ட லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் அபாரமாக ஆடிய சதம் அடித்தார். 69 ஆண்டுகளுக்குப்பின் ரோஹித் சர்மா, ராகுல் தொடக்க ஜோடி அதிகமான பாட்னர்ஷிப் மைத்தனர், அதுமட்டுமல்லாமல் 11 ஆண்டுகளுக்குப்பின் ஆசியாவுக்கு வெளியே தொடக்க ஜோடி 100 ரன்களைக் கடந்துள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ சேனலுக்காக கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:
லார்ட்ஸ் மைதானத்தில் நான் சதம்அடித்தது சிறப்பானது. ஏனென்றால் இது லார்ட்ஸ் மைதானம். ஒருவிதமான உற்சாகம், மகிழ்ச்சி சேர்ந்திருக்கும்.
கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரி்க்கெட் விளையாடமுடியாமல் இருந்தேன். நான் கிரிக்கெட் விளையாடிப் பழகும்போதே, டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். நான் வளரும்போது இருந்த தலைமுறையினர் டெஸ்ட் கிரிக்கெட்டைத்தான் விரும்பினர்.
என் தந்தை டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகமாக விரும்புவார் என்னுடைய பயி்ற்சியாளர்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவே என்னை ஊக்கப்படுத்தினர்.
டெஸ்ட் கிரிக்கெட் என் மனதுக்கு நெருக்கமானது. டெஸ்ட் கிரிக்கெட் அணியிலிருந்து நான் நீக்கப்பட்டபோது மிகுந்த வேதனையடைந்தேன். கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனால் அதற்கு யாரையும் குறைகூறவில்லை.
எனக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருந்தேன். அந்த வாய்ப்பு வந்தது, அதைப் பயன்படுத்தினேன். நான் அடித்த சதத்தை மிகவும் ரசித்து அடித்தேன் , அதிலும் லார்ட்ஸில் சதம் அடிப்பது சிறப்பானதுதானே.
டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படும் முன் ரன்களுக்காகவே விளையாடினேன். ஆனால், அதன்பின் அனுபவம் கிடைத்தபின், இந்த முறை ரன்களுக்காக விளையாடவில்லை,ஒவ்வொரு பந்தையும் பார்த்து, பார்த்து கவனமாக பேட் செய்தேன். இது கடினமான பணி, இது தொடரும். இதுபோன்று விளையாடுவதால், நிச்சயம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க உதவும்.
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT