Published : 24 Feb 2016 02:12 PM
Last Updated : 24 Feb 2016 02:12 PM
கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 2-0 என்று தொடரைக் கைப்பற்றி தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
70/1 என்று களமிறங்கிய ஆஸ்திரேலியா வெற்றிக்குத் தேவையான 201 ரன்களை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. பிரெண்டன் மெக்கல்லமின் கடைசி தொடர் 2-0 என்ற தோல்வியில் முடிந்தது.
ஆஸ்திரேலிய அணியில் முதல் இன்னிங்சில் சதம் கண்ட கேப்டன் ஸ்மித், 2-வது இன்னிங்ஸில் 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 53 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழந்தார். ஆட்ட நாயகனாக பர்ன்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி குறித்தும் நம்பர் 1 நிலை குறித்தும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறியதாவது:
இது எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம். ஒவ்வொரு தொடரையும் வெற்றி பெற விரும்புகிறோம், அதுவும் அயல்நாடுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு இலக்காகவே எங்களுக்கு மாறியுள்ளது.
இங்கு வரும்போது 2-0 என்று வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறுவோம் என்று தெரியும்.
இப்போது அணிக்கு உள்ள சவால் என்னவெனில் இந்த முதலிடத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து வெற்றி பெற்று தக்கவைக்க வேண்டும்
பெரிய சதங்கள்தான் அணியை எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்கும். இந்தத் தொடரில் கடினமான காலங்களையும் கடந்து வீரர்கள் நீண்ட நேரம் ஆடி பெரிய சதங்களை எடுப்பதில் நாட்டம் செலுத்துவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
எங்கள் பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்புடன், நேர்தியான அளவில் வீசி நியூஸிலாந்து பேட்ஸ்மென்களை தொடர்ச்சியாக நெருக்கடியில் வைத்திருந்தனர். அணி நெருக்கமான ஒரு குழுவாக உருவாவதை என்னால் உணர முடிகிறது, இது எனக்கு திருப்தியைத் தருகிறது.
இவ்வாறு கூறினார் ஸ்மித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT