Published : 12 Feb 2016 10:26 AM
Last Updated : 12 Feb 2016 10:26 AM

நம்ம ஊர் நட்சத்திரங்கள்: கூடைப்பந்து தேசிய அணியில் வத்தலக்குண்டு வீரர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டை சேர்ந்த எம்.காசிராஜன் தேசிய கூடைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், துபையில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டை சேர்ந்தவர் எம்.காசிராஜன்(24). இவர் துபையில் நாளை முதல் வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மங்களூருவில் இருந்து இந்திய அணி வீரர்களுடன் நேற்று இரவு துபை புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக எம்.காசிராஜன் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

திண்டுக்கல் எம்எஸ்பி பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது சீனியர் அணியில் இடம்பிடித்தேன். இதனால் விளையாட்டு வீரர்களுக் கான இடஒதுக்கீட்டில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. பி.ஏ. (வரலாறு) படிக் கும்போதே மாநில அணியில் இடம் பிடித்தேன். 2014-ம் ஆண்டு வரை தமிழக அணிக்காக விளை யாடினேன். பின்னர் வருமானவரித் துறையில் பணி கிடைத்தது. இதை யடுத்து குஜராத்தில் பணிக்கு சென்றேன். அங்கு வருமானவரித் துறை அணி மற்றும் குஜராத் மாநில அணிக்காக விளையாடினேன்.

மைசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற போது தேசிய அணிக்காக 25 பேரை தேர்வு செய்தனர். அதில் நானும் தேர்வானேன். தேர்வு செய்தவர்களுக்கு மங்களூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இங்கு இறுதியாக தேசிய அணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் எனக்கு இடம் கிடைத்தது.

சர்வதேச போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித்தருவதில் எனது பங்கை முக்கியமானதாக்குவேன். தொடர்ந்து தேசிய அணியில் எனக்குரிய இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் எனது விளையாட்டு இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x