Published : 14 Feb 2016 01:12 PM
Last Updated : 14 Feb 2016 01:12 PM
குவாஹாட்டியில் நடைபெற்று வரும் 12-வது தெற்காசிய விளை யாட்டுப் போட்டியில் நீச்சலில் வெள்ளிப் பதக்கம் பெற்ற டி.சேதுமாணிக்கவேலுக்கு திரு நெல்வேலியில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலியை சேர்ந்த சேதுமாணிக்கவேல் (16), வண் ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார். தேசிய பள்ளி மாணவர்களுக்கான விளை யாட்டுக் குழுமம் நடத்தும் நீச்சல் போட்டியில், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து இதுவரை தொடர்ச்சியாக முதலிடம் பெற்று சாதனை படைத்திருக்கிறார். தற்போது தெற்காசிய விளை யாட்டுப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற இவர் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
பதக்கம் பெற்று நேற்று திருநெல் வேலிக்கு வந்த சேது மாணிக்கவேலுக்கு, விளை யாட்டு ஆர்வலர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். சேது மாணிக்கவேலுக்கு மாலை அணி வித்து, செண்டைமேளம் முழங்க வரவேற்பு ஊர்வலம் நடத்தப் பட்டது. வரவேற்பு நிகழ்ச் சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெய சீலன் மற்றும் விளையாட்டுப் பயிற் சியாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் கனவு
வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் சேதுமாணிக்கவேல் கூறும்போது, "வரும் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், 2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம் பிக் போட்டியிலும் பங்கேற்று பதக்கங்கள் பெறுவதே எனது இலக்கு.
சர்வதேச அளவில் பயிற்சி பெறும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. அத்திட்டத்தின் கீழ் நீச்சல் பயிற்சி பெறுவதற்கு எனக்கு அரசு உதவினால் மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT