Published : 18 Feb 2016 11:47 AM
Last Updated : 18 Feb 2016 11:47 AM

கிராமப்புற விளையாட்டுகளை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் - கைப்பந்து அணி பயிற்சியாளர் பி.சுந்தரம் வலியுறுத்தல்

திருப்பூர் கைப்பந்து அறக்கட் டளை மற்றும் திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பெடரேஷன் மற்றும் சுலோச்சனா கோப்பைக்கான அகில இந்திய கைப்பந்துப்போட்டிகள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் 9 அணிகளும், மகளிர் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றுள்ளன.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகள் அனை வரும் திருப்பூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கைப்பந்துப் போட்டிகளில் வெவ்வேறு அணிகளுக்காக பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

சாதாரணமாக பள்ளி மைதா னத்தில் பயிற்சி எடுத்துக்கொண் டிருந்த இந்திய கைப்பந்து அணிக்காக 2006-ம் ஆண்டு முதல் விளையாடி வரும், மதுரையைச் சேர்ந்த உக்கிரபாண்டியிடம் பேசி னோம்: "இந்திய கைப்பந்து அணி யில் தமிழகத்தை சேர்ந்த வீரர் கள் அதிகளவில் இடம்பெற்றுள் ளோம்.

இந்திய பெண்கள் அணியில் கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தோர் அதிகள வில் இடம் பிடிக்கின்றனர். திருப் பூர் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நவீன் ராஜா ஜேக்கப், வைஷ்ணவ் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாடி வருகிறோம் " என்றார்.

தமிழக கைப்பந்து அணி பயிற்சியாளர் பி.சுந்தரம் கூறும்போது:

மாநிலம் மற்றும் சர்வதேச அளவில் கைப்பந்து விளையாடும் பலர் உரிய வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மின்வாரியம், போக்கு வரத்து, காவல்துறை போன்ற பல்வேறு துறைகளில் மாநில அரசு முன்னுரிமை வழங்கலாம்.

ஜூனியர், 21 மற்றும் 23 வயதுக்குட்பட்ட போட்டிகளில் விளையாடும் அனைவருக்கும், அரசு வேலை உத்தரவாதம் கொடுத்தால் தடகளம், கபடி, கைப்பந்து போன்ற கிராமப்புற விளையாட்டுகளில் பலர் ஜொலிப் பார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு ஆண்டு மட்டும் விளையாடினால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். ஆனால் இங்கு 15ஆண்டுகளாக இந்திய அணியிலேயே கைப்பந்து விளையாடுபவர்கள் நிலைமை இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.

எனவே கிராமப்புற விளை யாட்டுகளை அரசு ஊக்கப்படுத் தும் வகையில் தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும். இதனால் இந்தியாவின் விளையாட்டுத் திறன் அதிகரிக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x