

ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரஷித் கானும் நஜ்முல்லா ஜார்தன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு கிரிக்ெகட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐசிசி டி20 தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் 2-வது இடத்தில் ரஷித் கான், இருந்து வருகிறார். முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷாம்ஸி உள்ளார்.
உலகளவில் டி20 போட்டிகளில் நன்கு அறிமுகமான ரஷித் கான் டி20 கேப்டனுக்கு பொருத்தமானவர் .அவரின் அனுபவம், திறமை, தலைமைப் பண்பு அணியைச் சிறப்பாக வழிநடத்தும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. அடுத்த இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் இடம் பெறும்.
ஆப்கானிஸ்தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியிந் கேப்டனாக, ஹஸ்மத்துல்லா ஷாகிதியும், துணைக் கேப்டனாக ரஹ்மத் ஷாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆப்கன் வாரியம் தெரிவித்துள்ளது.
டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரஷித் கான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ என்னுடைய அணிக்கு சிறந்த கேப்டனாக செயல்படுவேன் என நம்புகிறேன். ரஷித் கான் என்ற பெயரை ஆப்கானிஸ்கான் வாரியம் எனக்கு அளித்துள்ளது.
என்னுடைய நாட்டு அணிக்காக, நாட்டுக்காக பணியாற்றுவது எனது கடமை. என் மீது நம்பிக்கை வைத்தமைக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. இது எனது கனவுப்பயணம், என்னுடைய ரசிகர்கள் ஆதரவு முக்கியமாநதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.