Published : 07 Jul 2021 10:27 AM
Last Updated : 07 Jul 2021 10:27 AM
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, கவுண்ட்டிசாம்பியன்ஷிப் போட்டியில் சர்ரே அணிக்காக இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன் ரவிச்சந்திரஅஸ்வின், கவுண்ட்டி அணியான நாட்டிங்காம்ஷையர் மற்றும் வோர்செஸ்டர்ஷையர் அணியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி டிரன்ட்பிரட்ஜ் நகரில் நடக்கிறது. அதற்கு முன்பாக இந்திய அணி எந்த பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவில்லை.
உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் பைனலில் அடைந்த தோல்விக்குப்பின் இந்திய வீரர்கள் பிரிட்டனை சுற்றிப்பார்த்து பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், கவுண்ட்டி அணியான சர்ரே அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.
அஸ்வினுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கான விசா இன்னும் கிடைக்கவில்லை. அவருக்கு சரியான நேரத்தில் விசா கிடைத்துவிட்டால், சர்ரே அணிக்காக வரும் 11-ம் தேதி சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
கடந்த 14 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 71 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகமான விக்கெட் வீழ்த்திய வீரர்களில் முன்னணியி் உள்ளார். இதற்கிடைேய டெஸ்ட் தொடருக்கு முன்பாக உள்நாட்டு அணியுடன் பயிற்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐ அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் முழங்கை காயம் காரணமாக 8 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதால், மாற்றுவீரரை தேடி வருகிறார்கள். அதேபோல் பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது, இங்கிலாந்து தொடருக்கு முன்பாக காயம் குணமடைந்து பயிற்சியில் ஈடுபடுவார் என அணி நிர்வாகம் நம்புகிறது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT