Published : 06 Jul 2021 08:38 AM
Last Updated : 06 Jul 2021 08:38 AM
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், தனது முதல்தரக் கிரிக்கெட்டில் ஆயிரமாவது விக்கெட்டை நேற்று வீழ்த்தினார்.
தற்போது கவுண்டி கிரிக்கெட் போட்டியில், லான்கேஷையர் அணிக்காக விளையாடிவரும் ஆன்டர்ஸன், கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்த மைல் கல்லை எட்டினார்.
இந்தப் போட்டியில் ஆன்டர்ஸன் தனது அபாரப் பந்துவீச்சில் ஜாக் கிராளி, ஜோர்டன் காக்ஸ், ஆலிவர் ராபின்ஸன், ஜேக் லீனிங், ஹீனியோ குன், மாட் மில்னெஸ், ஹேரி பாட்மோர் என 7 வி்க்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஹீனியோ குன் விக்கெட்டை ஆன்டர்ஸன் வீ்ழ்த்தியபோது, முதல்தரப் போட்டியில் ஆயிரமாவது விக்கெட்டை கைப்பற்றி அபாரமான சாதனையை நிகழ்த்தினார்.
கடந்த மாதம் மற்றொரு மைல்கல்லையும் ஆன்டர்ஸன் எட்டியிருந்தார். இங்கிலாந்து அணியில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை அலிஸ்டார் குக் பெற்றிருந்தார்.
குக் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிகளில் ஆன்டர்ஸன் களமிறங்கி, குக்கின் சாதனையை முறியடித்து தனது 162 போட்டியை ஆன்டர்ஸன் பதிவு செய்தார்.
இதுவரை 162 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆன்டர்ஸன் 617 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதில் 27 முறை 4 விக்கெட்டுகளுக்கு அதிகமாக வீழ்த்தியுள்ளார். 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆன்டர்ஸன் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் 11 முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
இருவருக்கும் அடுத்தார்போல் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 147 போட்டிகளில் பங்கேற்று 3-வது இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் முன்னாள் விக்கெட் கீப்பர் அலெக் ஸ்டீவார்ட் 133 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையை ஆன்டர்ஸ் மட்டுமே பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment