Published : 05 Jul 2021 04:04 PM
Last Updated : 05 Jul 2021 04:04 PM
இலங்கைக்கு எதிரான தொடரில் ரன்களை ஸ்கோர் செய்து, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவண் இடம் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை சென்று இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவண் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடன் தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கு ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து களமிறங்க பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஷுப்மான் கில் என ஏராளமான இளம் வீரர்கள் போட்டிபோடுகின்றனர். இதில் அனுபவ வீரர் ஷிகர் தவணுக்கு இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஷிகர் தவணுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதில் அவர் பேசியதாவது:
இந்திய அணியில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்க ஏராளமான போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் ஷிகர் தவண் தலைைமயில் இளம் இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது. 3 ஒருநாள், டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடஉள்ளது. இந்த வாய்ப்பை ஷிகர் தவண் பயன்படுத்திக்கொண்டு ரன்களை ஸ்கோர் செய்து, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும்.
இந்திய அணியில் ஷிகர் தவண் சீராக விைளயாடி ரன்களைச் சேர்த்தன் காரணமாகவே, அவருக்கு இலங்கைக்கு எதிரான இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் உள்ள அனுபவம் மிகுந்த, முதிர்ச்சியான வீரரும் ஷிகர் தவண் மட்டும்தான்.
இந்த வாய்ப்பை ஷிகர் தவண் தெளிவாகப் பயன்படுத்திக்கொண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும். ஏனென்றால், தொடக்க ஆட்டக்காரருக்கு ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்க கே.எல்.ராகுல் தயாராக இருக்கிறார். விராட் கோலியும், டி20 போட்டிகளில் தொடக்க வீரராகவே களமிறங்குவேன் எனத் தெரிவித்து வருகிறார். ஆதலால், அந்த இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது
ஆதலால், இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரைப் பயன்படுத்திக்கொண்டு, ஷிகர் தவண் ரன்களைக் குவித்து, அணிக்குள் இடம் பெற முயற்சிக்க வேண்டும்” இவ்வாறு வி.வி.எஸ். லட்சுமண் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT