Published : 21 Dec 2015 03:25 PM
Last Updated : 21 Dec 2015 03:25 PM

சென்னையின் எஃப்சி-க்கு மீம்மக்களின் அணிவகுப்பு மரியாதை!

சென்னை ஐபிஎல் அணிக்கு விசில் போட்டு வந்த தமிழக இணையவாசிகள், அந்த அணிக்கு ஊதப்பட்ட சங்கு நிமித்தமாக சற்றே அமைதி காத்து வந்தனர்.

இந்த நிலையில், ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்னை - கோவா அணிகள் மோதின. இப்போட்டியில் வென்ற சென்னை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சென்னையின் எஃப்சி இறுதிப் போட்டிக்கு நுழைந்த உடனே, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவு இயக்கத்தின் வானிலை சட்டென மாறிற்று.

சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அந்தத் தருணத்துக்கு முன்பில் இருந்தே கோல்போடுமச்சி, சென்னையின் எஃப்சி உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகின. குறிப்பாக, நெட்டிசன்கள் தங்கள் தலையாய கடமையான மீம்களின் அணிவகுப்பு மூலம் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதில், >சென்னை மீம்ஸ் குழுவினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அவற்றில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மீம்களின் தொகுப்பு:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x