Last Updated : 09 May, 2021 04:33 PM

 

Published : 09 May 2021 04:33 PM
Last Updated : 09 May 2021 04:33 PM

நான் பும்ராவின் ரசிகன்; டெஸ்ட்டில் 400 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்துவார்: கர்ட்லி ஆம்புரோஸ் புகழாரம்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரி்த பும்ரா | கோப்புப்படம்

புதுடெல்லி

நான் பார்த்த வேகப்பந்துவீச்சாளர்களிலேயே மிகவும் வித்தியாசமானவர் ஜஸ்பிரித் பும்ரா. அவரின் ரசிகனாகிவிட்டேன். டெஸ்ட் போட்டியில் நிச்சயம் எளிதாக 400 விக்கெட்டுகளை பும்ரா எட்டுவார் என மே.இ.தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்ட்லி ஆம்புரோஸ், கர்ட்னி வால்ஷ், பெஞ்சமின் உள்ளிட்ட மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கடந்த 1990 காலகட்டத்தில் உலகக் கிரிக்கெட்டையே தங்களின் பந்துவீச்சாள் மிரட்டினர். ஆட்டத்தை போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வல்லமை மிக்க பந்துவீச்சாளர்களில் ஒருவராக ஆம்புரோஸ் இருந்தார்.

98 டெஸ்ட் போட்டிகளில் ஆம்புரோஸ் 405 விக்கெட்டுகளை வீழ்த்தி, 20.99 சராசரி வைத்துள்ளார்.

சமீபத்தி் தி கர்ட்லி அன்ட் கரிஷ்மா ஷோ எனும் யூடியூப் தளத்துக்கு ஆம்புரோஸ் பேட்டி அளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய அணிக்கு சில வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளனர்.அதில் நான் ஜஸ்பிரித் பும்ராவின் தீவிர ரசிகன். நான் பார்த்தவரையில் மற்ற எந்த பந்துவீச்சாளர்களையும் விட பும்ரா வித்தியாசமாகப் பந்துவீசுகிறார். மிகச்சிறப்பாகப் பந்துவீசுகிறார். அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

பும்ரா தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு உடற்தகுதியுடன் இருந்தால், நீண்டகாலத்துக்கு விளையாட முடியும். அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும், வேகமாக வீச முடியும், யார்கர் வீச முடியும். தொடர்ந்து நல்ல உடல்நிலையுடன் இருந்து டெஸ்ட் போட்டியில் எளிதாக 400 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தி விடுவார்.

வேகப்பந்துவீச்சு என்பது ஒரு கலை. அதற்கு ரிதம் சரியாக இருக்க வேண்டும். பந்துவீசத் தொடங்கும் முன் ரிதம் சரியாக இருந்தால்தான் துல்லியமாகப் பந்துவீச முடியும்.

குறுகிய தூரமே ஓடிவந்து பும்ரா பந்துவீசுகிறார். குறுகிய தொலைவு ஓடி வருவதிலுமே பும்ரா சில அடிகள் நடந்துவிட்டு, அதன்பின் வேகமாக ஓடி வந்து பந்துவீசுகிறார். சுருக்கமாகச் சொல்லவதென்றால் தன்னுடைய உடலுக்குகுறைவான வேலைப்பளு அளிக்கிறார்.

அவர் தொடர்ந்து இதே உடல்நிலையில் இருக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. விராட்கோலி படையில் தொடக்க வீரர்கள் நல்ல வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் நல்ல அடித்தளத்தை அமைக்கத் தவறிவிட்டால் நடுவரிசையில் கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடும். ஆதலால் வலுவான தொடக்கவரிசை அவசியம் அவ்வாறு அமைந்தால் நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம், நெருக்கடி குறையும்

இவ்வாறு ஆம்புரோஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x