Last Updated : 07 May, 2021 09:01 PM

1  

Published : 07 May 2021 09:01 PM
Last Updated : 07 May 2021 09:01 PM

இந்திய அணி அறிவிப்பு: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் , இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 20 வலிமையான வீரர்கள் பட்டியல் வெளியீடு

கோப்புப்படம்

புதுடெல்லி


இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான 20 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் வரும் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

இதற்காகச் செல்லும் இந்திய அணி 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று, இறுதிப் போட்டிக்குத் தயாராகும்

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் முடிந்தபின், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

ஆகஸ்ட் 4 முதல் 8 வரை நாட்டிங்காமில் முதல் டெஸ்ட், லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட்12-16 வரை 2-வது டெஸ்ட், லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 25-29 வரை 3-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. ஓவல் மைதானத்தில் செப்.2-6 வரை 4-வது டெஸ்ட் போட்டியும், செப். 10-14 வரை 5-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.

இந்த இரு தொடர்களுக்கான வலிமையான 20 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. இதில் ஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே விலகிய ரவி்ந்திர ஜடேஜா , முகமது ஷமி, ஹனுமா விஹாரி ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றபோதிலும் அவர் விளையாடவில்லை. பந்துவீசுவதற்கு தகுந்த உடல்நிலையைப் பெறவில்லைஎன்பதால், அவர் பேட்ஸிமேன் என்ற அடிப்படையிலேயே விளையாடி வந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்அதிகமாகப் பந்துவீச வேண்டியது இருக்கும், ஆனால் பந்துவீசுவதற்கான உடல்நிலை இன்னும் பாண்டியா பெறவில்லை என்பதால் தேர்வு செய்யப்படவில்லை.

இளம் வீரர்கள் அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஸன் நாக்வஸ்வாலா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் விளையாடக் கூடியவர். ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸன் நாகஸ்வாலா ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்கள்.

இதில் 23வயதான குஜராத்தைச் சேர்ந்த நாக்வஸ்வாலா 16 முதல்தரப் போட்டிகளில் 63 விக்கெட்டுகலைவீழ்த்தியுள்ளார்.

மேலும், கே.எல்.ராகுல், விருதிமான் சாஹா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல், விருதிமான் சஹா இருவரும் உடற்தகுதி பெற்றால் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். குல்தீப் யாதவ், நவ்தீப் ஷைனி, பிரித்வி ஷா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட அக்ஸர் படேல் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். இதில் அதிர்ச்சிதரும்வகையில் உடல்நலம் பெற்று அணிக்குத் திரும்பி வந்துள்ள புவனேஷ்வர் குமார் டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படவி்ல்லை.

இ்ந்தியஅணி விவரம்:

ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், மயங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜின்கயே ரஹானே(துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருதிமான் சஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, முகமதுசிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல்

காத்திருப்பு வீரர்கள்: அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஸன் நாக்வஸ்வாலா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x