Published : 01 May 2021 04:25 PM
Last Updated : 01 May 2021 04:25 PM
ஐபிஎல் டி20 போட்டியில் இடம் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக நியூஸிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்ஸன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அடுத்துவரும் போட்டிகளுக்கு வில்லியம்ஸனே கேப்டனாகத் தொடர்வார், வார்னர் தேவையான உதவிகளை வழங்குவார் என சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற வார்னர், 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். டேவிட் வார்னர் தலைமையில் கடந்த 2017,2019 2020 ஆகிய 3 ஆண்டுகளுமே ப்ளே ஆப் சென்றது. 2018ம் ஆண்டில் 2-வது இடத்தைப் பிடித்தது. 2018ம் ஆண்டு கேப்டனாக வில்லியம்ஸன் பொறுப்பேற்று 2-வது இடம் வரை கொண்டு சென்றார்.
14-வது ஐபிஎல் டி20 சீசனில், இதுவரை சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளி்ல் விளையாடி இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. பல போட்டிகளை வெற்றியின் அருகே வந்து கோட்டைவிட்டது.
வழக்கமாக உற்சாகத்துடன் கேப்டன்ஷிப் பணியைச் செய்யும்டேவிட் வார்னர் இந்த சீசனில் மிகுந்த மனஉளைச்சலிலும், விரக்தியுடனும் கேப்டன் பணியைச் செய்தார். வார்னர் கடந்த 6 போட்டிகளில், 3,54,36,6,57 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
பெரும்பாலான போட்டிகளில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்புவது இல்லாவிட்டால் பந்துவீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசுவது போன்ற காரணங்களால் சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தது.
அதுமட்டுமல்லாமல் நடுவரிசையில் நிலைத்துஆடும் அளவிற்கு நல்ல உள்நாட்டு பேட்ஸ்மேன்கள் இல்லாததும், அவர்களை முறையாக வழிநடத்தவும் வார்னரால் இயவில்லைஎன்பதால் மாற்றப்பட்டுள்ளார்.
இது குறி்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “ நாளை நடக்கும் போட்டியிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்ஸன் தொடர்வார். அடுத்துவரும் போட்டிகளிலும் வில்லியம்ஸனே கேப்டனாகத் தொடர்வார். வெளிநாட்டு வீரர்களி்ன் தேர்வை மாற்றி அமைக்கும நோக்கில் இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நாளை நடக்கும் ஆட்டத்தில் ப்ளேயிங் லெவனிலிருந்தும் வார்னர் நீக்கப்படலாம்எனத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக ேம.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் சேர்க்கப்படலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT