Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM
கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல் தெரி வித்தார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 178 ரன்கள் இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் 16.3 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தேவ்தத் படிக்கலுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட தேவ்தத் படிக்கல் அதன் பின்னர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு பெங்களூரு அணியுடன் இணைந்தார்.
எனினும் 2வது ஆட்டத்தில்தான் களமிறங்க முடிந்தது. வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட 20 வயதான தேவ்தத் படிக்கல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 52 பந்துகளில், 101 ரன்களை விளாசி அனைவரது கவனத் தையும் ஈர்த்தார்.
போட்டி முடிவடைந்ததும் தேவ்தத் படிக்கல் கூறும்போது, “விரைவாக வெற்றியை பெறவிரும்பினோம். நான் ஆட்டமிழந்திருந்தால் கூட சதத்தை பற்றி நினைத்திருக்க மாட்டேன். என்னைபொறுத்தவரை நாங்கள் ஆட்டத்தை வெல்வது முக்கியம்.பேட்டிங்கில் வேறுபட்ட மற்றும் சிறப்புவாய்ந்த எதையும் நான் முயற்சிக்கவில்லை. முடிந்தவரை சீராக பேட் செய்ய முயற்சித்தேன். கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவருவது நிச்சயமாக பெரிய சவாலாக இருந்தது. 2வது ஆட்டத்தில்இருந்து அணியின் வெற்றிக்குஎன்னால் பங்களிப்பு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (25ம் தேதி), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோது கிறது.
இன்றைய ஆட்டம்
ராஜஸ்தான் - கொல்கத்தா
இடம்: மும்பை நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT