Published : 05 Jun 2014 10:00 AM
Last Updated : 05 Jun 2014 10:00 AM

பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச் – குல்பிஸ் மோதல்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், லாத்வியாவின் ஏர்னெஸ்ட் குல்பிஸ் ஆகியோர் மோத இருக்கின்றனர்.

சர்வதேச தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஜோகோவிச், தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள குல்பிஸை எளிதாக வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் குல்பிஸ் காலிறுதியில் செக். குடியரசின் தாமஸ் பெர்டிச்சுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தார். தரவரிசையில் பெர்டிச் 6-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காலிறுதியில் கனடாவில் மிலோஸ் ரயோனிக்கை ஜோகோவிச் எதிர் கொண்டார். இதில் 7–5, 7–6, (7–5), 6–4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

குல்பிஸ், பெர்டிச்சை 6-3,6-2,6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா கனடாவின் இஜுனி பவுச்சரை எதிர்கொள்கிறார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் பாரீஸ் நகரில் நேற்று மழை பெய்ததால் போட்டிகள் பாதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x