Published : 20 Mar 2021 02:55 PM
Last Updated : 20 Mar 2021 02:55 PM
கடந்த 5 ஆண்டுகளி்ல் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது, ஈர்க்கப்பட்ட டெஸ்ட் தொடர் இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான். ஏறக்குறைய 10.3 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவி்த்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்தது. கரோனா வைரஸ் பரவலுக்குப்பின் இரு சர்வதேச அணிகள் மோதும் தொடர்ந் இந்தியாவில் நடப்பதாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் அணி யார் என்பதை தெரிந்து கொள்ளும் போட்டியாகவும் இருந்ததால், பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்த தொடரில் இரு போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரு ஆட்டங்கள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடந்தன. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியை 1-3 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இங்கிலாந்தில் சவுத்தாம்டன் நகரில் ஜூன் மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூஸிலாந்து அணியுடன் மோதும் வாய்ப்பையும் இந்திய அணி பெற்றது. கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான பார்வையாளர்களால் இந்த டெஸ்ட் தொடர் பார்க்கப்பட்டுள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சஞ்சோக் குப்தா கூறுகையில் “ இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஓர் ஆண்டுக்குப்பின் இந்தியாவில் மீண்டும் சர்வதேசகிரிக்கெட்போட்டி நடந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஃபைனலுக்கு தகுதிபெறுவது, வலுவான இரு அணிகள் ஆகியவற்றால் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் 4 மொழிகளில் ஒளிபரப்பாகிய இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சராசரியாக இந்த டெஸ்ட் தொடரை 13 லட்சம் பேர் பார்்த்துள்ளனர் ஒட்டுமொத்தமாக 10.30 கோடி பேர் இந்தத் தொடரை பார்த்துள்ளனர். கடந்த 5ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகமாகப் பார்க்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இதுதான்” எனத் தெரிவித்தார்.
இந்த டெஸ்ட் தொடரில் குறிப்பாக அஸ்வின், அக்ஸர் படேல், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோரின் ஆட்டம் ரசிகர்களால் பெரும் ரசிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்ய வேண்டும் அல்லது வெல்ல வேண்டும் என்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT