Published : 02 Nov 2015 08:50 AM
Last Updated : 02 Nov 2015 08:50 AM
இந்தியா - பாகிஸ்தான் அணிகளி டையே மீண்டும் கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
இந்தியா பாகிஸ்தான் அணிகளி டையே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
கிரிக்கெட் போட்டி இரு நாட்டு ரசிகர்களையும் ஒருங்கிணைக்கும் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரராக இந்த கருத்தை கூறுகிறேன்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆட முடியாததாலும், தங்கள் ஊரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாத தாலும் பாகிஸ்தானில் உள்ள இளம் வீரர்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர்.
தெற்காசிய நாடுகளிடையே உறவுகளை மேம்படுத்துவதில் கிரிக்கெட் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்
பாகிஸ்தானியர்கள் விருந் தோம்பலில் சிறந்தவர்கள். அங் குள்ள உணவுகள் சுவையாக இருக்கும். 1978-ம் ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடச் சென்றபோது என் இடுப்பளவு 30 அங்குலமாக இருந்தது.
ஆனால் அந்த தொடர் முடிந்த பிறகு என் இடுப்பளவு 32 அங்குலமாக அதிகரித்தது. 1983-ம் ஆண்டில் பாகிஸ்தான் தொடருக்கு பிறகு என் இடுப்பளவு 34 அங்குலமாக அதிகரித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT