Last Updated : 02 Mar, 2021 06:55 PM

 

Published : 02 Mar 2021 06:55 PM
Last Updated : 02 Mar 2021 06:55 PM

4-வது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் எப்படி இருக்கும்? உண்மையை உடைத்த ரஹானே

அஜின்கயே ரஹானே : கோப்புப்படம்

அகமதாபாத்

அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் 4-ம் தேதி தொடங்க உள்ள கடைசி மற்றும் 4-வது டெஸ்ட்போட்டிக்கு ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பதை இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜின்கயே ரஹானே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

ஆனால், இந்திய அணிக்குச் சாதகமான ஆடுகளத்தை அமைத்துவிட்டார்கள், மோசான ஆடுகளம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் குற்றம்சாட்டினர்.

ஆனால், இந்திய வீரர் ரோஹித் சர்மா, " ஆடுகளத்தில் எந்த பேய் பிசாசும் இல்லை.இது பேட்ஸ்மேன்களின் தவறு" எனத் தெரிவித்தார். இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் " இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாடவில்லை. மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையி் 4-வது டெஸ்ட் போட்டிக்கு அகமதாபாத் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது இரு அணிகளுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அணியின் துணைக் கேப்டன் அஜின்கயே ரஹானே சூசகமாக ஆடுகளத்தைப் பற்றித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

4-வது டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தில் பெரிதாக மாற்றம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. 2-வது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் எவ்வாறு இருந்ததோ அதேபோன்று தான் 4-வது டெஸ்ட் போட்டியிலும்ஆடுகளம்இருக்கும் என நினைக்கிறேன்.

உண்மையில் 3-வது டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்பட்டதுதான் போட்டியின் தன்மையை மாற்றியது. வழக்கமான சிவப்பு பந்தோடு ஒப்பிட்டால், பிங்க் பந்து ஆடுகத்திளத்தில் பட்டவுடன் வேகமாக வரும். இதை நாம்தான் சரிசெய்ய வேண்டும். ஆதலால், கடந்த இரு போட்டிகளுக்கு இருந்ததைப்போலவே ஆடுகளம் இருக்கும் என நம்புகிறேன்.

ஆனால் எவ்வாறு விளையாடப்போகிறோம் என்பது மட்டும் எனக்குத் தெரியாது, பொறுத்திருந்து பார்க்கலாம். இங்கிலாந்து அணியை மதிக்கிறோம், சிறந்த வீரர்கள், சரிவிகதத்தில் அணி வீரர்கள் உள்ளனர். கடந்த 2 போட்டிகளாக நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.

இங்கிலாந்து அணியில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடினர், இருப்பினும் அவர்களை அடுத்தடுத்த போட்டியில் எளிதாக நாங்கள் எடுக்கவில்லை. இங்கிலாந்தும் இந்தத் தொடரை வெல்லவே எங்களுக்கு கடும் போட்டியளிக்கிறார்கள்.

டிஆர்எஸ் முறையில் பேட்ஸ்மேன்கள் அனுகும்முறை மாறிவிட்டது என நான் நினைக்கவில்லை. அனைத்தும் மனதைப் பொறுத்தது. டிஆர்எஸ் முறை உண்மையில் அனைத்து அணிகளுக்கும் உதவுகிறது.

சந்தேகத்துக்கிடமான முடிவுகளைப் பரிசீலனை செய்யலாம், உங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தலாம். பிங்க் பந்தில் விளையாடுவதற்கும், சிவப்புப் பந்தில் விளையாடுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. பிங்க் பந்து திடீரென எழும்பும், ஆனால், சிவப்பு பந்து வரும் வேகத்தில் மாற்றம் இருக்கும். நாங்கள் பிங்க் பந்தில் அதிகமாக விளையாடியது இல்லை.

இது எங்களுக்கு 3-வது போட்டி என்பதால், இன்னும் அதிகமான அனுபவம் அவசியம். ஸ்பின்னர்களுக்கு உகந்த ஆடுகளத்தில் விளையாடும் போது, லைன் லென்த் மிகவும் அவசியம்
இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x