Published : 18 Feb 2021 06:00 PM
Last Updated : 18 Feb 2021 06:00 PM
சென்னையில் நடந்து வரும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ரூ. 14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லும், ரிச்சர்ட்ஸன் ரூ.14 கோடிக்கும் ஏலத்தில் எடுக்ககப்பட்டுள்ளனர்.
இதில் இளம் வீரர்களுக்கான ஏலம் நடந்தது. இதில் தமிழக அணி வீரர் ஷாருக்கானுக்கு ரூ.20 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு ஏலம் நடந்தது.
சமீபத்தில் நடந்த முஷ்டாக்அலிக் கோப்பைப் போட்டியில் தமிழக அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஷாருக்கானின் ஆட்டம் காரணமாக அமைந்தது. அதிரடியாக ஆடக்கூடிய ஷாருக்கானுக்கு ரூ.5.25 கோடி கொடுத்து பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎல் போட்டியில் லைகா கோவைகிங்ஸ் அணியில் இடம்பெற்று ஷாருக்கான் விளையாடி வருகிறார். ஷாருக்கானை எடுக்க கொல்கத்தா, ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் கடும் போட்டியிட்டன. இதில் ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஷாருக்கானை வாங்கியது.
அதேபோல கர்நாடக ஆப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கவுதமுக்கு அடிப்படை விலை ரூ.20லட்சம் நிர்ணயிக்கப்பட்டது இவரை ஏலத்தில் எடுக்க சன்ரைசர்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் கடுமையாக போட்டியி்ட்டன
உச்ச கட்டமாக ரூ.5 கோடிக்கு கவுதமை விலைக்கு வாங்க சன்ரைசர்ஸ் அணி முன் வந்தது. ஆனால், சிஎஸ்கே அணி தாமதமாக வந்து ரூ.7.75 கோடி கொடுப்பாக அறிவித்தது. அதன்பின் ரூ.8.75 கோடியாகவும், ரூ.9 கோடியாகவும் கவுதமுக்கு சிஎஸ்கே அணி விலை வைத்தது. இறுதியாக ரூ.9.25 கோடி கொடுத்து கவுதமை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கியது.
இதேபோல சவுராஷ்டிரா இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சேட்டன் சகாரியாவுக்கு அடிப்படை விலையாக ரூ.20லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணிக்கும், ஆர்சிபி அணிக்கும் சேட்டன் சகாரியாவை எடுக்க போட்டியிட்டன. ஆர்சிபி அணி ரூ.85 லட்சத்துக்கு சகாரியாவை விலைக்கு கேட்டது. ஆனால், ராஜஸ்தான் அணி ரூ.ஒரு கோடிக்கு சகாரியாவை கேட்டது. அதன்பின் இறுதியாக ரூ.1.2 கோடிக்கு சகாரியாவை ராஜஸ்தான் அணி விலைக்கு வாங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT