Published : 18 Feb 2021 04:39 PM
Last Updated : 18 Feb 2021 04:39 PM
சென்னையில் நடந்து வரும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமான விலைக்கு எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் எனும் பெருமையையப் பெற்றார்.
மும்பை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையே கிறி்ஸ் மோரிஸை வாங்க கடும் போட்டி இருந்தது. இறுதியாக மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விலைக்கு வாங்கியது.
இதுவரைஐபிஎல் வரலாற்றில், 2015ம் ஆண்டு ரூ.16 கோடிக்கு யுவராஜ் சிங்கை டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியதுதான் அதிகபட்சமாக இருந்தது.
அடுத்ததாக, கேகேஆர் அணி ரூ.15 கோடிக்கு பாட் கம்மின்ஸை 2020ம் ஆண்டு வாங்கியிருந்தது, 2017ம்ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.17 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை விலைக்கு வாங்கியது. 2014ம் ஆண்டில் ஆர்சிபி அணி ரூ. 14 கோடிக்கு யுவராஜ் சிங்கை விலைக்கு வாங்கி இருந்தது. ஆனால், ரூ.16 கோடிக்கும் அதிகமாக எந்த வெளிநாட்டு வீரரும் வாங்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு அனைத்தையும் கிறிஸ் மோரிஸுக்கு கொடுக்கப்பட்ட விலைமுறியடித்துவிட்டது
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரூ.10 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் இந்த ஆண்டு அந்த அணியால் கழற்றிவிடப்பட்டார். இதனால் ரூ.75 லட்சத்துக்கு அடிப்படை விலையில்தான் மோரிஸ் ஏலத்தில் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், கிறிஸ் மோரிஸ் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதால், மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ரூ.2 கோடிவரை சென்று ரூ.5 கோடிக்கு மும்பை அணி கேட்டது.
ஆனால், ஆர்சிபி அணி தொடர்ந்து போட்டியிட்டதால், மும்பை அணி ரூ.9 கோடிக்கு ஏலத்தில் மோரிஸை எடுப்பதாக அறிவித்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தில் புகுந்து, ரூ.10 கோடியாக அறிவித்து ரூ.11.75 கோடி விலை வைத்தது.
ஆனால் மும்பை அணி நிர்வாகம் விடாமல் துரத்தி ரூ.13 கோடிக்கு மோரிஸுக்கு விலை வைத்தது. ராஜஸ்தான் அணி நிர்வாகம் ரூ.13.50 கோடியாகவும், பின்னர் ரூ.14 கோடியாகவும் அறிவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகி நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரூ.15 கோடியாக மோரிஸுக்கு விலை வைத்தார். ஆனால், ராஜஸ்தான் அணி நிர்வாகம் விடாப்படியாக மோரிஸுக்கு ரூ.15.75 கோடியாக உயர்த்தியது. பிரித்தி ஜிந்தார ரூ.16 கோடியாக மோரிஸுக்கு விலை வைத்தார். இறுதியாக ரூ.16.25 கோடிக்கு மோரிஸை ராஜஸ்தான் அணி விலைக்கு வாங்கியது.
ஷிவம் துபேக்கு யோகம்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு ரூ.50லட்சம் அடிப்படை விலை வைக்கப்பட்டது. ஆர்சிபி அணியில் கடந்த சீசனில் விளையாடிய துபேயை ரூ.90 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் கேட்டது. அதன்பின் ராயல்ஸ் அணி ஏலத்தில் பங்கேற்கவே ரூ.1.90 கோடிக்கு விலை பேசியது சன்ரைசர்ஸ் அணி. இறுதியாக ரூ.4.4 கோடிக்கு ஷிவம் துபேயை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் வைக்கப்பட்ட துபேவுக்கு ரூ.4.40கோடிக்கு விலை போயுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT