Last Updated : 17 Feb, 2021 04:43 PM

 

Published : 17 Feb 2021 04:43 PM
Last Updated : 17 Feb 2021 04:43 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அஸ்வின் திடீர் முன்னேற்றம்: புஜாரா சரிவு

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரவிச்சந்திர அஸ்வின்: படம் உதவி | ட்விட்டர்.

துபாய்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டி வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை அஸ்வின் வென்றார். இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் 336 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் மே.இ.தீவுகள் வீரர் ஹோல்டர் 407 புள்ளிகளுடனும், ரவிந்திர ஜடேஜா 403 புள்ளிகளுடனும் 2-வது இடத்திலும் உள்ளனர். 2-வது இடத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடததால், தரவரிசையில் 397 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளார். 352 புள்ளிகளுடன் வங்கதேச வீரர் சஹிப் அல்ஹசன் உள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திர அஸ்வின் தொடர்ந்து 804 புள்ளிகளுடன் தொடர்ந்து 7-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 761 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் தொடர்கிறார். முதலிடத்தில் ஆஸி. வீரர் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் உள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி, சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் 5-வது இடத்திலேயே நீடிக்கிறார். வில்லியம்ஸன் 919 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

878 புள்ளிகளுடன் லாபுஷேன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 4-வது இடத்திலும் உள்ளனர். 3-வது இடத்தில் இருந்த ஜோ ரூட் சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட் செய்யாததால் 4-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

இந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாரா சென்னை டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் 21,7 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 727 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x