Published : 16 Feb 2021 08:39 AM
Last Updated : 16 Feb 2021 08:39 AM
2021-ம் ஆண்டில் நடக்கும் 14-வது ஐபிஎல் டி20 தொடரிலிருந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிெல் டி20 தொடருக்கான ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு 10 அணிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள், விடுவிக்ககப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் வழங்கிவிட்டன.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஏராளமான வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
ஒட்டுமொத்தமாக 1,114 சர்வதேச, உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதில் 8 அணிகளும் வீரர்களை பட்டியலை உறுதி செய்து 292 வீரர்களே ஏலத்தில் பங்கேற்க சம்மதித்துள்ளன. இதில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணைநாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை ஏலத்தில் 16 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டு 9 வீரர்களை விடுவித்துள்ளது. இதில் ஏலத்தில் 5 வெளிநாட்டு வீரர்களையும், 4 உள்நாட்டு வீரர்களையும் கிங்ஸ் லெவன் அணி வாங்க முடியும். தற்போது அந்த அணியிடம் ரூ.53.20 கோடி இருப்பில் இருக்கிறது.
இந்நிலையில் நீண்டகாலமாகவே கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தங்கள் பெயரை மாற்றவேண்டும் என பிசிசிஐ அமைப்பிடம் கோரி வந்துள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின்பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் 14-வது ஐபிஎல் டி20 தொடரிலிருந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெயர், பஞ்சாப் கிங்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என பிசிசிஐ அமைப்புத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT