Published : 12 Feb 2021 08:25 AM
Last Updated : 12 Feb 2021 08:25 AM
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும், 16 வீரர்கள் கொண்ட வலிமையான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. மார்ச் 12-ம் தேதி டி20 போட்டித்தொடர் அகமதாபாத்தி்ல் தொடங்குகின்றன. 5 போட்டிகளும் அகமதாபாத்தில்தான் நடைபெற உள்ளது.
டி20 தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு கேப்டனா இயான் மோர்கன் அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் 26-ம் தேதி இங்கிலாந்து வீரர்கள் அமகதாபாத் புறப்பட்டுச் செல்கின்றனர்.
சென்னையில் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. கடைசி இருடெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கின்றன. அந்த டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் அகமதாபாத்திலேயே 5 டி20 போட்டிகளும் நடக்கின்றன.
இங்கிலாந்து டி20 அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோர்கன் என வலிமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் கலக்கிய லிவிங்ஸ்டோன் முதல்முறையாக டி20 போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பிக்பாஷ் லீக் தொடரில் லியாம் லிவிங்ஸ்டோன் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதால் அணிக்குள் வந்துள்ளார். டாம் கரன், சாம் கரன், டேவிட் மலான், மொயின்அலி, ஜேஸன் ராய், ஆதில் ரஷித் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து டி20 அணி விவரம்:
இயான் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜோனத்தன் பேர்ஸ்டோ, சாம் கரன், ஜோஸ் பட்லர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷித், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளி, மார்க் உட், சாம் பில்லிங்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT