Published : 08 Feb 2021 04:00 PM
Last Updated : 08 Feb 2021 04:00 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதையடுத்து, ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்ரிங் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் விளாசிய ரிஷப்பந்த் பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து, ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராக ரிஷப்பந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐசிசி, கிரிக்கெட் வர்ணனையாளர்கள், ரசிகர்கள், கிரிக்கெட் பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள், ஒளிபரப்பாளர்கள் எனப் பலரும் ஆன்லைனில் வாக்களித்தனர்.இவர்கள் அனைவருக்கும் 90 சதவீத வாக்குகளும், ரசிகர்களுக்கு 10 சதவீத வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது இதன் அடிப்படையில் ரிஷப் பந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐசிசியின் சிறந்த மாதாந்திர வீரராக தேர்வு செய்யப்பட்டது குறித்து ரிஷப் பந்த் கூறுகையில் “ எந்த வீரருக்கும், அணியின் வெற்றிக்கு பங்களிப்பதே சிறந்த உட்சபட்ச விருது.
ஆனால், ஐசிசியின் இதுபோன்ற மாதாந்திர விருதுகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, என்னை ஒவ்வொரு முறையும் சிறப்பாக விளையாட ஊக்கமாக இருக்கும். இந்தவிருதை இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் அர்ப்பணிக்கிறேன். எனக்கு வாக்களித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
ஐசிசி வாக்கெடுப்பு அகெடாமியின் சார்பில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா கூறுகையில் “ சிட்னி, பிரிஸ்பேன் ஆகிய இரு போட்டிகளிலும் நெருக்கடியான காலக்கட்டத்தில் சவாலை எதிர்கொண்டு ரிஷப்பந்த் விளையாடினார். ஒரு போட்டி டிரா ஆனது, மற்றொரு ஆட்டம் வெற்றியில் முடிந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் ரிஷப் பந்த் தனது ேபட்டிங் திறமையை வெளிப்படுத்தினார”எனத் தெரிவி்த்தார்
தென் ஆப்பிரிக்க மகளிர் அணியின் ஷப்னிம் இஸ்ெமயில் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இஸ்மெயில் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment