Published : 06 Feb 2021 06:34 PM
Last Updated : 06 Feb 2021 06:34 PM
களத்தில் 9 மணிநேரம் நின்று, 337 பந்துகளைச் சந்தித்து தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட்டின் அட்டகாசமான பேட்டிங்கால் சென்னையில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இ்ங்கிலாந்து அணி மிக வலுவான நிலையை நோக்கி நகர்ந்துள்ளது.
2-வது நாளான இன்றைய ஆட்டம் நேரமுடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் சேர்த்துள்ளது. டாம் பெஸ் 28ரன்னிலும், லீச் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
தனது 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அற்புதமான இன்னிங்ஸை ஆடி இரட்டை சதம் அடித்து 218 ரன்களில் (377பந்துகள் 19பவுண்டரி, 2சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அபாரமாக ஆடிய ரூட் 260 பந்துகளில் 150 ரன்களையும், 341 பந்துகளில் 200 ரன்களையும் எட்டினார். அஸ்வின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து 200 ரன்களை ரூட் அடைந்தார். 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் உலகில் முதல் வீரர் எனும் பெருமையை ரூட் பெற்றார்.
இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் நாளை முதல் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆதலால், 600 ரன்களை எட்டவிடாமல் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் முயல வேண்டும்.
கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு மேல் அடித்த எந்த அணியும் தோற்றதில்லை என்ற வரலாறு இருக்கிறது. அதை இந்திய அணி மாற்ற முயல வேண்டும்.
இங்கிலாந்து அணியில் 3 சுழற்பந்துவீச்சாளர்களும் பகுதிநேரமாக வீசக்கூடிய ஜோ ரூட்டும் உள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு இந்திய பேட்ஸ்மேன்களை சுழற்பந்துவீச்சில் திணறவைக்க முயலலாம்.
இன்னும் 9 செஷன்கள் இந்திய அணிக்கு இருப்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாக பேட் செய்யலாம். விக்கெட்டுகளை விரைவாக இழக்கும் பட்சத்தில் ஆட்டம் முடிவை நோக்கிச் செல்லும்.
முதல்நாளான நேற்றை விட இன்று இங்கிலாந்து அணியின் ரன் சேர்ப்பில் சிறிது வேகம் தென்பட்டது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை ஒரு கை பார்த்த, ஸ்டோக்ஸ், ரூட் இருவரும் ரன்களை வேகமாகச் சேர்த்தனர்.
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரூட் ஸ்ட்ரைட் ரேட் 30 சதவீதம் இருந்தாலும், வாஷிங்டன் சுந்தர், நதீம் இருவருக்கும் எதிராக ஸ்ட்ரைக் ரேட் 70 சதவீதமாக குக் உயர்த்திக் கொண்டார்.அஸ்வின் பந்துவீச்சில் கவனமாக ஆடிய ரூட், சுந்தர், நதீம் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
அதிலும் எதிர்காலத் தலைமுறை பேட்ஸ்மேன்களுக்கு இந்திய மண்ணில், ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து பேட் செய்வது என மிகப்ெபரிய பாடத்தையே ரூட் எடுத்துவி்ட்டார். எந்தவிதமான தவறையும் செய்யாமல், எந்தவிதமான வாய்ப்பையும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வழங்காமல் ரூட் பேட் செய்தது அழகு.
இந்தியப் பந்துவீச்சாளர்கள் நேற்றைவிட இன்று சற்று வெறுப்படைந்துவிட்டனர். ஆஸ்திரேலியாவில் பவுன்ஸரில் எகிற வைத்த இந்திய பந்துவீச்சாளர்கள் சென்னையில் அதுபோன்ற எந்தவிதான நெருக்கடியையும் இங்கிலாந்து பேட்ஸமேன்களுக்கு கொடுக்கவி்ல்லை.
இந்திய பந்துவீச்சாளர்களை குறைகூறி பயனில்லை, சேப்பாக்கம் ஆடுகளம் இவ்வளவு மோசமாக இருக்கும் என நினைக்கவில்லை. டெட்பிட்ச் என்று அழைப்பார்கள் அதுபோன்று பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதத்திலும் உதவாத பிட்சாக வடிவமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆடுகளங்களில் போட்டி நடந்தால், ரசிகர்கள் வெறுப்பின் உச்சிக்குச் செல்வார்கள், போட்டியும் ஒருதரப்பாகவே இருக்கும்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்திருந்தது இங்கிலாந்து அணி. ரூட் 128ரன்களுடன் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பென்ஸ்டோக்ஸுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை நொந்துபோகச் செய்யும் வகையில் பேட் செய்தனர். இருவரையும் ஆட்டமிழக்க வைக்க கேப்டன் கோலி பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் வழக்கமான சில பெரிய ஷாட்களை அவ்வப்போது ஆடி ரன்களை வேகமாகச் சேர்த்தார்.
118 பந்துகளைச் சந்தித்த ஸ்டோக்ஸ் 82 ரன்னில் நதீம் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தனர்.
5-வது விக்கெட்டுக்கு ஒலே போப்புடன் பார்னர்ஷிப் அமைத்து 86 ரன்கள் சேர்த்தால் ரூட். ஸ்டோக்ஸ் 82 ரன்னிலும், போப் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி 473 ரன்கள்வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அதன்பின் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 53 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி போப்(34) ஆட்டமிழந்தார். நதீம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரூட் ஆட்டமிழந்தார்.
இசாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ஆர்ச்சர், பட்லர் போல்டாகி வெளியேறினர். 55 ரன்களுக்குள் போப்(34), ரூட்(218)பட்லர்(30), ஆர்ச்சர்(0) ஆகியோர் வி்க்கெட்டுகள் மடமடவென சரிந்தது. டாம்
பெஸ் 18 ரன்னிலும், லீச் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.180 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555ரன்கள் சேர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT