Last Updated : 11 Jan, 2021 07:34 AM

 

Published : 11 Jan 2021 07:34 AM
Last Updated : 11 Jan 2021 07:34 AM

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இரு போட்டிகளில் ரவிந்திர ஜடேஜா விளையாடமாட்டார்

இடதுகை பெருவிரலில் காயம் அடைந்த ரவிந்திர ஜடேஜா : படம் உதவி | ட்விட்டர்

சிட்னி


இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தமாதம் தொடங்கும் டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா விளையாடமாட்டார் எனத் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிட்னியில் நடந்துவரும் ஆஸிக்கு எதிரான 3-வதுடெஸ்ட் போட்டியின்போது முதல் இன்னிங்ஸில் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய பந்தில்இடதுகை பெருவிரலில் பந்து பட்டு, ஜடேஜாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்தக் காயம் குணமடைய 6 வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா விளையாடவாய்ப்பில்லை.

அதுமட்டுமல்லாமல் சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ரவிந்திர ஜடேஜாவால் பந்துவீசுவும் முடியவில்லை, பேட்டிங் செய்யவும் முடியவில்லை என்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ஒருவேளை 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் வலிநிவாரணி ஊசி போட்டுக்கொண்டு ஜடேஜா பேட்டிங் செய்ய வாய்ப்பு உண்டு ஆனால், அது கடைசிநேர முடிவுக்கு உட்பட்டது என அணிநிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தரப்பு கூறுகையில் “ ஜடேஜாவுக்கு கை விரலில்ஏற்பட்ட காயம் குணமடைய 4 முதல் 6 வாரங்கள் குறைந்தபட்சம் தேவைப்படும். ஆதலால், அவரால் பிப்ரவரி மாதம் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது. அதன்பின் அவரின் உடல்நிலையைப் பொறுத்து அடுத்து வரும் போட்டிகளுக்கு முடிவு செய்யப்படும் ” எனத் தெரிவிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x