Published : 23 Jun 2014 03:24 PM
Last Updated : 23 Jun 2014 03:24 PM
பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் யு.எஸ். அணி போர்ச்சுக்கல் அணியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
இதனால் யு.எஸ். 4 புள்ளிகள் பெற்றுள்ளது. போர்ச்சுக்கல் 1 புள்ளி பெற்றது. ஜெர்மனி அணி 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள மற்றொரு அணியான கானா 1 புள்ளி பெற்றுள்ளது. யு.எஸ். இனி ஜெர்மனியுடன் ஒரு ஆட்டத்தில் ஆட வேண்டும், கானா அணி போர்ச்சுக்கலுடன் விளையாட வேண்டும்.
இந்த ஆட்டங்களில் யு.எஸ். அணி ஜெர்மனியுடன் டிரா செய்தாலே போதுமானது இரு அணிகளும் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.
போர்ச்சுக்கலுக்கு எதிராக அமெரிக்க அணி தங்ஙளது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இடைவேளைக்குப் பிறகு அந்த அணியின் ஜெர்மைன் ஜோன்ஸ் மற்றும் கிளிண்ட் டிம்ப்சே இரண்டு கோல்களை அடிக்க 0-1 என்று பின் தங்கிய அமெரிக்கா 2-1 என்று முன்னிலை பெற்றது.
போர்ச்சுக்கல் அடித்த முதல் கோலே யு.எஸ் வீரர் ஜெஃப் கேமரூன் செய்த தவறின் விளைவே. இடது புறத்திலிருந்து வந்த பந்தை சரியாக வாங்கவில்லை அவர் பந்து போர்ச்சுக்கல் வீரர் நேனியிடம் சென்றது. அவர் அதனை கோலாக மாற்றி முன்னிலை பெற்றுத்தந்தார்.
ரொனால்டோவிடம் ஒவ்வொரு முறை பந்து வரும்போதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இடது புறம் 3 அமெரிக்க வீரர்களை அவர் ஆட்கொண்ட விதம் அபாரம். முதல் கோலுக்கு முன்னால் நடந்தது இது.
இடைவேளைக்கு சற்று முன்பாக போர்ச்சுக்கல் அணி முன்னிலை பெற்றிருக்கும் ஆனால் அமெரிக்க கோல் கீப்பர் அதனை முறியடித்தார். நேனி அடித்தா ஷாட் ஒன்று கோல் போஸ்ட்டில் பட்டு மீண்டும் வந்தது. போர்ச்சுக்கல் வீரர் உடனே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோலை நோக்கித் தூக்கி அடித்தார் ஆனால் அமெரிக்க கோல் கீப்பர் பிரமாதமாகத் தடுத்தார். மெக்சிகோவின் ஓச்சா அன்று தடுத்த கோல்களின் தரநிலையை இந்தத் தடுப்பும் எட்டியுள்ளது.
ஆனால் 64வது நிமிடத்தில் அமெரிக்கா சமன் செய்தது. கார்னர் ஷாட் ஒன்றை போர்ச்சுக்கல் கோல் எல்லையருகே எதிர்கொண்ட அமெரிக்க வீரர் ஜோன்ஸ் சக்திவாய்ந்த ஷாட் ஒன்றின் மூலம் கோல் அடித்தார்.
பிறகு 81வது நிமிடத்தில் முழு வாய்ப்பு என்று கூற முடியாத ஒரு பாஸை எதிர் கொண்ட அமெரிக்க வீரர் டெம்ப்ஸி கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.
இடைவேளைக்குப் பிறகு அமெரிக்க வீரர்களால் சாதுவாக்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, வலது புறத்திலிருந்து அற்புதமான ஒரு உத்தியக் கையாள பந்து வரேலாவிடம் வர அவர் அதனைத் தலையல் கோலுக்குள் தள்ளுகிறார். அமெரிக்க கோல் கீப்பர் ஹோவர்ட் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது நடந்தது 95வது நிமிடத்தில்.
யு.எஸ். வெற்றி வாய்ப்பைப் பறித்தார் வரேலா. போர்ச்சுக்கல் ஒரு புள்ளி பெற்று அடுத்த சுற்றில் நுழைய மிக மிகக் கடினமான வாய்ப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT