Published : 29 Dec 2020 07:10 PM
Last Updated : 29 Dec 2020 07:10 PM

தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்ட பிக்கில் பால் போட்டி

சமீபத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பிக்கில் பால் அசோசியேஷன் (டிஎன்பிஏ) 20-ம் தேதி அன்று சென்னை திருவேற்காடு அருகே உள்ள குட் லைஃப் ஃபிட்னஸ் (Good Life Fitness) அரங்கத்தில் அமெச்சூர் பிக்கிள் பால் ஃபெடரேஷன் இந்தியா & ஆசிய பிக்பால் சம்மேளனத்துடன் இணைந்து மாநில அளவிலான போட்டிகளை நடத்தியது.

பிக்கிள் பால் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமாகி தற்போது இந்தியாவிலும் பரவலாக விளையாடப்படுகிறது. டென்னிஸ் மற்றும் பாட்மிண்டன் விளையாட்டுகளின் கலவை இது. அனைத்து வயதினரை ஈர்க்கும் இந்த விளையாட்டை, 2018ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, உலக அளவில் 30 லட்சம் பேர் விளையாடுகின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 2000 பிக்கிள் பால் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் 45 வீரர்கள் பங்குபெற்றனர். காலை 9 மணிக்குத் தொடங்கி நாள் முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினர்களாக இந்திய முன்னாள் பாட்மிண்டன் வீரர் டாக்டர் யுவா தயால் மற்றும் இந்திய பாட்மிண்டன் வீரர் ராஜேஷ் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருது அமர்வின்போது வெற்றியாளர்களுக்குப் பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், பாய்ஸ் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடந்தன.

மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் போட்டி, நோய்த்தொற்றுக் காலத்தில், ஊரடங்காலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து புதிய நுட்பத்துடன் விளையாடப்படுகிறது.

பிக்கிள் பால் சங்கத்தின் தலைவர் புருஷோத்தமனும், செயலாளர் மோஹித் குமாரும் இந்தப் போட்டிகளுக்குத் தலைமை தாங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x