Published : 25 Dec 2020 03:11 PM
Last Updated : 25 Dec 2020 03:11 PM

அடுத்த 6 மாதங்களுக்கு புவனேஷ்வர் குமார் கிரிக்கெட் விளையாடுவது சந்தேகம்: எப்போது இந்திய அணிக்குத் திரும்புவார்?

ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் வீரர் புவனேஷ்வர் குமார் காயம் அடைந்த காட்சி : கோப்புபடம்

மும்பை


இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில்தான் புவனேஷ்வர் குமார் பங்கேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த புவனேஷ்வர் குமார், தொடையில் தசைப்பிடிப்பு காரணமாக, போட்டித் தொடரின் இடையே விலகினார். தற்போது பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் புவனேஷ்வர் பயிற்சி எடுத்து வருகிரார்.

புவனேஷ்வருக்கு பயிற்சி அடுத்தமாதம் முடிந்தாலும், அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடமாட்டார், 2021 ஏப்ரல் மே மாதங்களில் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் ஆங்கில நாளேடு ஒன்றிடம் கூறுகையி்ல் “ அடுத்த 6 மாதங்களுக்கு புவனேஷ்வர் குமார் ஓய்வு எடுக்கவும், பந்துவீச்சு முறையையும் மாற்றவும் இருப்பதால், விளையாடமாட்டார்” என ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புவனேஷ்வர் குமார் உடல்நிலை குறித்து உடற்தகுதி வல்லுநர் ஹீத் மேத்யூஸ் கூறுகையில் “ கடந்த சில ஆண்டுகளாகவே புவனேஷ்வர் குமார் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் காயத்தால் அவதிப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

வேகப்பந்துவீச்சில் உடலை வருத்தி பந்துவீச வேண்டும். இதனால்தான் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு குறுகிய நாட்களிலேயே முதுகு வலி, இடுப்பு வலி, தசைப்படிப்பு, பின்இடுப்பில் வலி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வந்துவிடுகின்றன. இதனால், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது, வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீசும் முறையை சற்று மாற்றுவார்கள்.

அதேபோலத்தான் புவனேஷ்வர் குமாரும் தனது பந்துவீசும் முறையையும் மாற்ற பயிற்சி எடுத்து வருகிறார். அதிகமான வேகம், கூடுதல் ஸ்விங் செய்ய முயற்சி எடுத்து ஒருவேகப்பந்துவீச்சாளர் முயன்றால் 2 அல்லது 3 போட்டிகளுக்கு தாக்குப்பிடிக்கலாம். ஆனால், அதன்பின் தாங்குவது கடினம்.

உடலில் அழுத்தம் ஏற்படும். அதன்காரணமாகவே பந்துவீச்சு முறையை மாற்றுவார்கள். உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமான பளு ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ளவும் உடல் நீண்டகாலம் எடுக்கும் என்பதால் பந்துவீச்சு முறையில் சிறிது மாற்றம் செய்வார்கள். அதன்படிதான் புவனேஷ்வர் குமாரும் செய்து வருகிறார் என அறிந்தேன் ” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x