Published : 03 Oct 2015 10:50 AM
Last Updated : 03 Oct 2015 10:50 AM
தரம்சலாவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கான 200 ரன்களை விரட்டி வென்றது தென் ஆப்பிரிக்கா. இந்த எதிர்பாராத தோல்வி குறித்து தோனி தன் கருத்துகளை பரிசளிப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
வெற்றிக்கு நெருக்கமாக வந்தோம்... ஆனால் பனிப்பொழிவு சிறிது சிக்கலை ஏற்படுத்தியது. சில தருணங்களில் நாங்கள் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்தோம்.
இத்தகைய ஓவர்கள் பவுலர்களுக்கு நெருக்கடியான தருணம், சில தீர்ப்புகள் எங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததும் அழுத்தத்தை அதிகரித்தது. இதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
நான் கடைசி ஓவரை ரெய்னாவுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் இங்குள்ள சூழ்நிலைகள் அதற்குச் சாதகமாக இல்லை என்று நினைத்தேன். வலது, இடது கை கை பேட்ஸ்மென் இருவருக்குமே அக்சர் நன்றாக வீசினார்.
இங்கு பந்தை வீசும் முறையை செயல்படுத்துவது முக்கியம், ஏனெனில் பிட்ச் பேட்டிங்குக்குச் சாதகமானது, அவுட் ஃபீல்டில் பந்துகள் பறக்கின்றன. எனவே பந்தை எங்கு பிட்ச் செய்வது என்பதை செயல்படுத்தும் விதம் இங்கு முக்கியம்.
இத்தகைய பிட்ச்களில் எதிரணி பேட்ஸ்மென்களை தவறான ஷாட்களை ஆட வைக்க வேண்டும். அத்தகைய தவறான ஷாட்களுக்கு அவர்கள் வசப்படுமாறு வீச வேண்டும். இதில்தான் விக்கெட்டுகள் விழ சாத்தியம் அதிகம்.
இவ்வாறு கூறினார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT