Last Updated : 15 Nov, 2020 11:55 AM

 

Published : 15 Nov 2020 11:55 AM
Last Updated : 15 Nov 2020 11:55 AM

மறக்க முடியுமா இந்த நாளை: ‘லிட்டில் மாஸ்டர்’ சர்வதேசப் போட்டியில் தடம் பதித்தநாள்: 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகம்

புதுடெல்லி


இந்தியக் கிரிக்கெட்டில் நவம்பர் 15-ம் தேதிக்கு அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது. இருகாரணங்களாக்க நவம்பர் 15-ம் தேதியை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது.

1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் சுருட்டை முடியுடன், பால்மனம் மாறாத சிறுவனம், பேட்டை எடுத்துக்கொண்டு சர்வதேச வீரர்களின் மின்னல் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள களம்புகுந்த நாள் நாள் இன்றுதான்.

கராச்சி டெஸ்டில் அறிமுகமாகிய சச்சின் , வக்கார் யூனுஸ்

ஆம், பேட்டிங் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் கராச்சியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று தான்(1989, நவம்பர் 15) அறிமுகமாகினார்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெடில் முடிசூடா மன்னராக சச்சின் வலம் வந்தார். சச்சின் பேட்டிங்கைப் பார்த்து அச்சப்படாத பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை, சச்சின் ஷாட்களை பார்த்து ரசிக்காத எந்த பந்துவீச்சாளர்களும் இல்லை.

சச்சினை திணற வைப்பேன் என்று சவால்விட்டு வந்து பந்துவீசிய பந்துவீச்சாளர்கள்கள் ஒரு கட்டத்தில் தங்களின் பந்துவீச்சில் அவர் அடிக்கும் கவர் ட்ரைவ், எஸ்ட்ரோ கவர் ஷாட்களைப் பார்த்து கைதட்டி ரசித்துள்ளார்கள். கிரிக்கெட்டை இந்தியாவில் மதமாக மாற்றிய பெருமை லிட்டில் மாஸ்டரையேச் சாரும்.

1989-ம் ஆண்டு, நவம்பர் 15-ம் தேதி கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் மட்டுமல்லாமல் இந்திய அணியில் சலீல் அங்கோலா எனும் பந்துவீச்சாளரும் அறிமுகமாகினார். அதேபோல பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ், சாஹித் சயீத்தும் அன்றுதான் அறிமுகமாகினர்.

அன்ற காலகட்டத்தில் பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சுக்கு புகழ்பெற்றது. இம்ரான்கான், வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் ஆகிய 3 ஜாம்பவான்கள் சிம்ம சொப்னமாகத் திகழ்ந்தார்கள். அதிலும் வக்கார் யூனிஸ் முதல் போட்டியாக இருந்தாலும், அவரின் பந்துவீச்சு நேர்த்தியும், பவுன்ஸலும், யார்கரும் அனுபவமான பந்துவீச்சாளரைப் போல் இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் இம்ரான்கான் சதம் அடிக்க 409 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 72.2 ஓவர்களில்262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் 24 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 15 ரன்களில் வக்கார் யூனுஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதில் வக்கார் யூனிஸ் பவுன்ஸரில் தலையில் ஹெல்மெட்டில் அடிவாங்கி சச்சின் பேட்செய்தார்.

2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 453 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய சஞ்சய் மஞ்சரேக்கரின் அபாரமான சதத்தால், சித்துவின் 85 ரன்கள் ஆகியவற்றால் 3 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்தபோது, ஆட்டம் டிரா ஆனது. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல்போட்டியில் சச்சின் அறிமுகமாகி 15 ரன்கள் சேர்த்தால் 2-வது இன்னிங்ஸில் விளையாடவும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், பைசலாபாத்தில் நடந்த 2-வது ெடஸ்ட் போட்டியில் சச்சின் தனது பேட்டிங்கை நிரூபித்து முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் சேர்த்தார். 3-வது டெஸ்ட் போட்டியில்அரைசதம் அடிக்கும் வாய்ப்பை சச்சின் த வறவி்ட்டு 41 ரன்னில் அப்துல் காதர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சாய்ல்கோட்டில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் வாக்கர் யூனுஸ் வீசிய பந்து சச்சின் மூக்கில் பட்டு ரத்தம் சொட்டியது. ஆனால் மனம்தளராமல் ஓய்வுக்குப்பின் ஆடிய சச்சின் 2-வது அரைசதத்தை அந்தப் போட்டியில் நிறைவு செய்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கிரிக்ெகட்டில் ஜாம்பவானாகத் திகழ்ந்த சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் சேர்த்தார். இதில் 51 சதம், 68 அரைசதங்கள். பேட்டிங்கில் 53.78 சராசரி வைத்துள்ள சச்சினின் அதிகபட்சம் 248 நாட்அவுட் ஆகும்.

மற்றொரு மறக்க முடியாத நினைவு 2013-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆகவே நவம்பர் 15-ம்தேதியை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x