Published : 15 Nov 2020 10:10 AM
Last Updated : 15 Nov 2020 10:10 AM

கோலி படையினர் யாருக்கும் கரோனா இல்லை: இந்திய அணியினர் பயிற்சியைத் தொடங்கினர்

தமிழக வீரர் நடராஜன் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி : படம் உதவி ட்விட்டர்

சிட்னி


ஆஸ்திரேலியாத் தொடருக்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்கட்டப் பயிற்சியை நேற்று தொடங்கினர்.

ஆஸ்திேரலியாவில் 2 மாதங்கள் பயணம் மேற்கொண்டு இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும்டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதற்காக துபாயில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அங்கிருந்தபடியே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

சிட்னி நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ள இந்திய அணியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப்பின் போட்டியில் பங்கேற்கின்றனர். அதற்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் வந்த வீரர்கள் மட்டும் ஹோட்டலுக்கு அருகே இருக்கும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வீரர்கள் அனைவரும் நேற்று வெளியில் சென்று பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

இந்திய அணி வீரர்கள் பயிற்சியி ல்ஈடுபடும் புகைப்படத்தையும் பிசிசிஐ தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா, குல்தீப் யாதவ், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் ஆகியோர் சிட்னியில் உள்ள பிளாக்டவுன் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், உமேஷ் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், சத்தேஸ்வர் புஜாரா ஆகியோரும் பயிறச்சியில் பங்கேற்றனர். தீபக் சாஹர், டி நடராஜன், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆகியோர் மைதான வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

வரும் 27-ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. 29 மற்றும் டிசம்பர் 2-ம் தேதி 2 மற்றும் 3-ம் ஒருநாள் போட்டி நடக்கிறது. டிசம்பர் 4-ம் தேதி முதல் டி20 தொடர் தொடங்குகிறது.

டிசம்பர் 17-ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் கேப்டன் கோலி இந்தியா புறப்படுவார். அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். விராட் கோலி இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பை அஜின்கயே ரஹானே ஏற்பார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x