Published : 25 Oct 2015 01:16 PM
Last Updated : 25 Oct 2015 01:16 PM
இருதரப்பு ஒருநாள் தொடர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசி போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி மற்ற அணிகளைக் காட்டிலும் பலம் மிக்கதாக திகழ்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இருதரப்பு தொடர்களின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் 10 போட்டிகளில் வென்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
மாறாக இந்தியா இத்தகைய 21 கடைசி போட்டிகளில் 11-ல் வென்று 9-ல் தோல்வி தழுவியுள்ளது.
2-ம் இடத்தில் ஆஸ்திரேலியா 16 கடைசி போட்டிகளில் 10-ல் வெற்றி பெற்று 5-ல் தோல்வி தழுவியுள்ளது.
3-ம் இடத்தில் இலங்கை அணி உள்ளது. இது 14 கடைசி போட்டிகளில் 7-ல் வென்று 5-ல் தோல்வி தழுவி 2 போட்டிகள் நோ-ரிசல்ட் ஆகியுள்ளது.
பாகிஸ்தான் நிலைமை இன்னும் மோசம். 28 கடைசி போட்டிகளில் 10-ல் மட்டுமே வென்று 17-ல் தோல்வி தழுவியது.
ஆனால் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடரில் இரு அணிகளுமே தங்கள் சொந்த நாட்டுக்கு வெளியே தங்களிடையே நடந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. 2005-06 ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிராக 2-2 என்று டிரா செய்திருந்தது தென் ஆப்பிரிக்கா.
இந்தியாவுக்கு ஆதரவான இன்னொரு புள்ளி விவரம் என்னவெனில், 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 4-2 என்று தொடரைக் கைப்பற்றியது. அதன் பிறகு 7 ஒருநாள் தொடர்களை இந்திய அணியை இங்கு வெற்றி பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா கடைசியாக தொடரின் கடைசி போட்டியை வங்கதேசத்துக்கு எதிராக சமீபத்தில் இழந்தது நினைவு கூரத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT