Last Updated : 08 Oct, 2015 07:28 PM

 

Published : 08 Oct 2015 07:28 PM
Last Updated : 08 Oct 2015 07:28 PM

சொந்த மண்ணில் தோல்வியடைவது ஒரு அணியாக காயப்படுத்துகிறது: விராட் கோலி

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஈடன் கார்டனில் மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இந்நிலையில் மைதானத்தில் விராட் கோலி அளித்த சிறு நேர்காணலில் தனது பேட்டிங், தோல்வி குறித்து கூறினார்.

“என்னுடைய மனநிலை உண்மையில் மாறுவதில்லை (நான் கேப்டனாக இருக்கிறேனோ அல்லது இல்லையோ). இலங்கை தொடரிலிருந்து நன்றாக ஆடுவதாக உணர்கிறேன்.

பயிற்சியாலர் சஞ்சய் பாங்கரிடம் நிறைய உரையாடுகிறேன். நான் முன்னெப்போதையும் விட தற்போது பந்துகளை சரியாக அடிப்பதாகவே இருவரும் உணர்ந்தோம்.

கிரீஸில் எனது பேலன்ஸ், பந்தை அடிக்கும் தருணம் ஆகியவை குறித்து இன்னும் சரி செய்ய வேண்டிய பகுதிகள் உள்ளன. தரம்சலாவில் வேறொரு பணியைச் செய்தேன், சிங்கிள் எடுத்து ரோஹித்திடம் ஸ்ட்ரைக் கொடுத்தேன்.

2-வது போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகிவிட்டேன். இது சர்வதேச கிரிக்கெட்டில் நிகழக்கூடியதுதான். இப்போதைக்கு நான் பந்தை அடிக்கும் விதம் குறித்து எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.

தோல்வி, ஒரு அணியாக காயப்படுத்துகிறது, ஏனெனில் நாம் நம் சொந்த மண்ணில் ஆடுகிறோம், தென் ஆப்பிரிக்காவை விட நமக்கு இந்தச் சூழ்நிலைகள் பழக்கமானவை.

ஆனால் கடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு நிறைய டி20 போட்டிகளில் நாங்கள் ஆடவில்லை. தற்போது உலகக் கோப்பை டி20-ஐ முன்னிட்டு நிறைய டி20-களில் ஆடுகிறோம்.

நாங்கள் எங்கள் மீதே கடுமையை சுமத்திக் கொள்ளக் கூடாது, இந்த போட்டிகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். உலகக் கோப்பைக்கு முன்பாக சிறந்த அணிச் சேர்க்கையை பரிசோதித்துப் பார்க்க இந்தத் தொடர் மறைமுகமாக உதவி புரிந்துள்ளது என்றே கூற வேண்டும்”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x