Published : 03 Nov 2020 11:58 AM
Last Updated : 03 Nov 2020 11:58 AM
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஆர்சிபி தோல்வியடைந்தாலும் எப்படியோ பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விட்டது. ஆனால் பேட்டிங் ஏதோ கிரீன் டாப்பில் 1970-80களின் ஜமைக்கா பிட்சில் ஆடுவது போல் ஏன் இத்தனை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே கேள்வி.
இதைத்தான் கோலியும் அவதானிக்கிறார். பவர் ப்ளேயில் ஆர்சிபி 40/1, 10 ஒவர்களில் 60 ரன்கள், இது எப்படி ஒருநாள் போட்டிகளுக்கே போதாது என்ற காலமாயிற்றே. பிறகு ஏ.பி.டிவில்லியர்ஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் என்று விளாச 152/7 என்று மரியாதைக்குரிய ஒரு ரன் எண்ணிக்கையை எட்டினர். கடைசி 6 ஓவர்களில் 62 ரன்கள் வந்ததால் இந்த நிலை இல்லையேல் பிளே ஆஃப் தகுதியே கேள்விக்குறியாகியிருக்கும்.
இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது:
நாம் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் தைரியமாக ஆட வேண்டியுள்ளது. பந்து வீச்சில் டீசண்டாக இருக்கிறோம். பவர் ப்ளேயில் வலுவாக இருக்கிறோம், அதாவது பந்து வீச்சில், நாங்கள் வென்ற போட்டிகளிலும் பவர் ப்ளேயில் பந்து வீச்சு வலுவாக இருந்தது.
இந்த விஷயங்களை ஒழுங்காக செயல்படுத்தினால் முடிவு நமக்குச் சாதகமாக இருக்கும். ஆனால் தன்னம்பிக்கையுடன் இந்தப்போட்டிகளிலிருந்து நாம் கண்ட சாதக கூறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், இன்னும் 2 போட்டிகள்தான் இறுதிக்குச் செல்வோம்.
தகுதி பெறுவதற்கு முன்பாக ஆம் கொஞ்சம் அடிக்க தயங்கித் தயங்கிதான் ஆடினோம். ஆனால் இப்போது மனம் திறந்து விட்டது. ஆம் இனி தைரியமாக ஆட வேண்டியதுதான், ஒரு அணியாக அதையே விரும்புகிறோம், என்றார்.
கோலியே இந்த ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் 460 ரன்கள் எடுத்தாலும் ஸ்ட்ரைக் ரேட் பார்த்தால் 122 தான். ஐபிஎல் 2019-ல் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 141.46. பந்துகள் அவரது விருப்பத்துக்கேற்ப வருவதில்லை, பெரிய மைதானம், மந்தமான பிட்சும் ஒரு காரணம்.
கோலி மேலும் கூறியதாவது, ”17.3 ஓவர்களில் டெல்லி வெற்றிபெற்றால் தகுதி பெற முடியாது என்று நிர்வாகம் எனக்கு தகவல் அளித்தது. ஆட்டம் கையை விட்டு நழுவினாலும் மிடில் ஓவர்களில் அவர்களைக் கட்டுப்படுத்தி 19 ஓவர் வரை இழுத்தோம். இந்தத் தொடரில் நல்ல முறையில் ஆடித்தான் தகுதி பெற்றிருக்கிறோம்” என்றார் விராட் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT