Published : 02 Nov 2020 09:38 AM
Last Updated : 02 Nov 2020 09:38 AM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தேவையில்லாமல் தோற்று பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்து இந்தியாவுக்கு டிக்கெட் போட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14-ல் 6-ல் மட்டும் வென்று 7-ல் தோல்வி கண்டு வெளியேறியது.
கடைசி 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் தேவையின்றி தோற்றது கிங்ஸ் லெவன், குறிப்பாக பலவீனமான சிஎஸ்கேவிடம் தோற்றிருக்கக் கூடாது, போட்டு சாத்தி எடுத்திருக்க வேண்டும், தோனி கேப்டன்சியில் எதிரணியினர் எப்போதும் போட்டு சாத்தி எடுத்தால் அவரே போட்டியை கைவிட்டு விடுவார், இந்தத் தன்மையை அவரதுடெஸ்ட் மேட்ச்களிலும் பார்த்திருக்கிறோம், ஒருநாள், டி20 போட்டிகளிலும் கேப்டன்சியில் பார்த்திருக்கிறோம். இதனை கே.எல்.ராகுல் சரியாகப் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் வெளியேறிய கேப்டன் ராகுல் கூறியதாவது:
நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. பெரிய இக்கட்டான போட்டி, 180-190 ரன்கள் எதிர்பார்த்தோம். தொடரின் முதல் பாதியில் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக இல்லை. ஆனாலும் நல்ல கிரிக்கெட்டை ஆடியதாகவே உணர்கிறோம். துண்டு துணுக்காக நன்றாக ஆடினோம்.
தொடரின் முதல் பாதியில் பவுலிங்கும் பேட்டிங்கும் ஒன்று சேரவில்லை. 2வது பாதியில் பிரமாதமாக ஆடியது போற்றத்தக்கது. இதுஇப்படி இருந்திருக்கலாம், அப்படியிருந்திருக்கலாம் என்று ஏகப்பட்டது கூற முடியும். ஆனால் ஏமாற்றமே. நிறைய போட்டிகளில் முடிவுகள் எங்கள் பாக்கெட்டுகளில் இருந்தது, வெற்றி பெறத்தான் முடியவில்லை.
எங்களையே குறைகூறிக் கொள்ள வேண்டியதுதான், நாங்கள்தான் காரணம்.
இவ்வாறு கூறினார் ராகுல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT