Published : 01 Nov 2020 02:57 PM
Last Updated : 01 Nov 2020 02:57 PM
13-வது ஐபிஎல் சீசன் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி மட்டுமே தகுதி பெற்றுள்ளநிைலயில் அடுத்த 3 இடங்களைப் பிடிக்க 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கு முன் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடைசி லீக் சுற்றுவரும்போது பெரும்பாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்த அணி செல்லும் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிடும், ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், இந்த முறை எந்த அணி 2,3,4 இடங்களைப் பிடிக்கப்போகிறது என்பதை ஊகிக்கமுடியாத அளவுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் 2,3 இடங்களில் புள்ளிகள் அடிப்படையில்இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் மோசமாக இருக்கின்றன. இரு அணிகளில் யார் 2-வது இடத்தைப் பிடிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
அதேபோல 3மற்றும் 4-வது இடத்துக்கு பஞ்சாப், ராஜஸ்தான், சன்ரைசர்ஸ், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், டெல்லி, ஆர்சிபி அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் வெல்லும் அணி 2-வது இடத்தைப் பிடிக்கும்.
அதேசமயம், தோற்கும் அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வர முடியும். ஆனால், அதற்கு ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டியது இருக்கும். இதுபோன்ற ஒவ்வொரு அணியின் முடிவும், மற்றொரு அணியின் கைகளில் இருப்பதால் போட்டி சூடுபிடித்துள்ளது.
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தற்போது 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 7 தோல்வி 12 புள்ளிகளுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட் -0.133 என்ற கணக்கில் இருக்கிறது. இன்று பிற்பகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது பஞ்சாப் அணி.
பஞ்சாப் அணியைப் பொருத்தவரை சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். எந்த ரன் வித்தியாசத்திலும் வென்றாலும் பரவாயில்லை ஆனால் வெற்றி கட்டாயம். அவ்வாறு வென்றால் ப்ளே ஆஃப் சுற்றில் 3-வது இடத்தைப் பெற முடியும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியைவென்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வந்துவிடும். ஆனால், பஞ்சாப் அணி தனது ரன்ரேட்டை உயர்வாக வைத்திருப்பது அவசியம். அதாவது, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடக்கும் ஆட்டத்தில் வெல்லும் அணியைவிட ரன்ரேட்டை பஞ்சாப் அணி உயர்வாக வைத்திருக்க வேண்டும்.
அதற்கு சிஎஸ்கே அணிக்கு எதிராக 180 ரன்களை பஞ்சாப் அணி அடிக்க வேண்டும், அல்லது ஒரு ரன்னில் வென்றாலே போதுமானது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணியைவிட ரன்ரேட் அதிகமாகப் பெற கொல்கத்தா அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். ஒருவேளே சேஸிங் செய்வதாக இருந்தால், 13 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும். இது நடந்தால், ராஜஸ்தான் அணியின் நிகர ரன்ரேட் பஞ்சாப் அணியைவிட உயர்வாக இருக்கும். ஆதலால், பாதுகாப்பாக இருக்க சிஎஸ்கே அணிக்கு எதிராக வெல்வதும், அதிலும் நல்ல ரன்ரேட்டில் வெல்வது இன்னும் கூடுதல் சிறப்பு
ஆனால் கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை 85 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்த வேண்டும், அல்லது 9.3 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும்.ஆனால் நி்ச்சயம் கொல்கத்தாவுக்கு கடினமான இலக்கு. ஆதலால், பஞ்சாப் அணி இன்று நடக்கும்ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றாலே போதுமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT