Published : 28 Oct 2020 10:16 AM
Last Updated : 28 Oct 2020 10:16 AM

2009 போல் பேட்டிங் செய்யும் போது முன்காலை விலக்கிக் கொண்டு மைதானத்துக்கு வெளியே அடிக்க முடிவெடுத்தேன்: ஆக்ரோஷ வார்னர் வெளிப்படை

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் 47வது போட்டியில் பேட்டிங்கில் வார்னர், சஹா கூட்டணியும் பந்துவீச்சில் ரஷீத் கானும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கினர்.

இதன் மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வியடைந்து சற்றே கவலையில் உள்ளது. வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களையும் சஹா 45 பந்துகளில் 87 ரன்களையும் விளாச 219 ரன்களை ஹைதராபாத் குவிக்க டெல்லி அணி 131 ரன்களுக்குச் சுருள ரஷீத் கான் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த திடீர் அதிரடி முறைக்குத் திரும்பியது பற்றி டேவிட் வார்னர் கூறியதாவது:

இதற்கு முந்தைய போட்டியில் விரட்டலில் மிகுந்த ஏமாற்றமடைந்தோம். இன்று நான் டாஸில் கூறியது போல் முதலில் பேட் செய்வதென்று முடிவெடுத்து விட்டோம்.

டாஸ் தோற்றது குறித்த ஏமாற்றம் இல்லை. பேட்டிங்கில் 2009ம் ஆண்டு போல் முன் காலை சற்றே விலக்கிக் கொண்டு மைதானத்தை கிளியர் செய்யும் ஷாட்களை ஆடுவதென்றும் டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து அடித்து ஆடுவது என்றும் முன்தீர்மானம் செய்து கொண்டேன்.

பேர்ஸ்டோவை உட்கார வைப்பது கடினமான முடிவு. கேன் வில்லியம்சனை 4ம் நிலையில் இறக்குவது வேலை செய்யும் என்று நினைத்தோம்.

விருத்திமான் சஹா என்ன அடி! பவர் ப்ளேயில் அவரது ஸ்ட்ரைக் ரேட் நம்ப முடியாதது. துரதிர்ஷ்டவசமாக லேசாக காயமடைந்தார். ரன்கள் கொடுக்காமலேயே விக்கெட்டுகளை வீழ்த்தும் தந்திரம் ரஷீத் கானுடையது.

ஷார்ஜாவில் 2 போட்டிகள் உள்ளன. இரு ஆட்டங்களிளும் 220 ரன்கள் எடுத்தோம் என்றால் நாங்களும் ப்ளே ஆஃப் ரேசில் இருப்போம். யாருக்குத் தெரியும்!

இவ்வாறு கூறினார் வார்னர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x