Published : 24 Oct 2020 10:25 AM
Last Updated : 24 Oct 2020 10:25 AM
ஷார்ஜாவில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2020-ன் 41வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றுமேயில்லாத சிஎஸ்கேவை துவம்சம் செய்தது.
சாம் கரன் அரைசதம் இல்லையெனில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் என்பதோடு மொத்தமே 20 ஒவரில் முழு போட்டியுமே முடிந்திருக்கும். 114/9 என்று ஓரளவுக்கு மரியாதையான இலக்கை சிஎஸ்கே எட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 74 பந்துகளில் 116/0 என்று வெற்றி பெற்றது.
குவிண்டன் டி காக் 37 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 47 ரன்கள் விளாசி நாட் அவுட் ஆக, இஷான் கிஷன் இதே 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
ஓய்வறையில் இளைஞர்களிடம் காணாத ‘ஸ்பார்க்கை’ தோனி மற்ற அணிகளின் வீரர்களிடமிருப்பதை களத்தில் கண்டிருப்பார். அதுவும் அரைசதத்தை ஜடேஜாவை ரிவர்ஸ் ஸ்விப்பில் பாயிண்டில் அடித்த சிக்ஸ் இருக்கிறதே, அத் ஜடேஜா எனும் டெஸ்ட் கிளாஸ் பவுலருக்கு அவமானம்தான்.
முதலில் போல்ட் (4/18), பும்ரா (2/25) சிஎஸ்கேவை சிதைத்தனர். ஆனால் இஷான் கிஷன் கூறியதுதான் ஆச்சரியமாக உள்ளது, சிஎஸ்கேவை இந்த முறை வருவோர் போவோர் எல்லாம் சாத்தி எடுக்கின்றனர், ஆனால் இவரோ கடினமான அணி என்கிறார்.
இந்நிலையில் சிஎஸ்கே பவுலிங்கை சிதறடித்த இஷான் கிஷன் கூறியதாவது:
நான் பாசிட்டிவ் ஆக ஆட முயன்றேன். இந்த மாதிரியான இலக்குகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக ஆட வேண்டியதாகும்.
டி காக்குடன் பேட் செய்தாலே சுறுசுறுப்புடன் இருப்போம். அவரிடமிருந்துதான் புதிய வகையான ஷாட்களை ஆடுவதை கற்றுக் கொள்கிறேன்.
சீசன் இல்லாத சமயத்தில் தரையோடு தரையாக ஆடுவதில் கொஞ்சம் கூர்மைபடுத்திக் கொண்டேன். ஏனெனில் இங்கு அவுட் ஆகி விட்டால் புது வீரர் வந்து பேட் செய்வது எளிதல்ல.
இந்தப் போட்டி எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் சிஎஸ்கே அனுபவம் வாய்ந்த அணி. அவர்களுக்கு எதிராக சுலபமான போட்டி என்பதே இல்லை, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT