Published : 22 Oct 2020 11:53 AM
Last Updated : 22 Oct 2020 11:53 AM
அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து பறித்து கேப்டன்சியை மோர்கனிடம் அளித்தார்கள், ஆனால் அவருக்கு இன்னமும் அணியின் தன்மை பிடிபடவில்லை.
மேலும் சுனில் நரைன், ரஸல் இல்லை. பேட்டிங் படுமோசமாக அமைந்தது. ஷுப்மன் கில், திரிபாதி தலா 1 ரன்னில் வெளியேற நிதிஷ் ராணா சிராஜிடம் டக் அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் சாஹலிடம் எல்.பி.ஆனார். களநடுவர் அவுட் கொடுக்கவில்லை, கோலி அப்பீல் செய்து கொடுக்கவில்லை எனில் இதுவே அதிசயம் இந்நிலையில் கோலி ரிவியூ செய்து அவுட் கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?- 3வது நடுவர் அதை எல்.பி. என்றார்.
மோர்கன் மட்டுமே அதிகபட்சமாக 30 ரன்களை எடுக்க, கமின்ஸும் 4 ரன்களில் சாஹலிடம் வெளியேறினார். குல்தீப், பெர்கூசன் முறையே 12, 19 ரன்களை எடுக்க கொல்கத்தா 84/8 என்ற ஸ்கோரை (?) எட்டியது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு 13.3 ஓவர்களில் 85/2 என்று வென்றனர். 39 பந்துகள் மீதமிருந்தன உண்மையில் 59 பந்துகள் மீதம் வைத்து வென்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் தோல்வி கேப்டன் மோர்கன் கூறும்போது, “பேட்டிங்கில்தான் சரிவு தொடங்கியது. 4-5 விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தால் என்னதான் செய்வது?
ஆர்சிபி நன்றாக வீசினர், ஆனால் நாம் அதை இன்னும் சுதானமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். பனிப்பொழிவு இருந்தது, முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.
டாப் 3 வீரர்கள் தேர்வில் சீரான முறையில்தான் தேர்வு செய்கிறோம். டாப் 3 வீரர்கள்தான் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்பதை ஆழமாக நம்புகிறோம். அவர்கள் தங்கள் திறமையைக் காட்டியுள்ளனர், எனவே இந்திய பேட்ஸ்மென்களை காப்பது அவசியம்.
ரஸல், நரைன் உடற்தகுதி பெற்று ஆடத் தயாராகி விட்டார்கள் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட வீரர்கள் அதுவும் இருவருமே ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் போனது பெரிய ஓட்டைதான். அவர்கள் அடுத்த போட்டிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT