Published : 17 Oct 2020 11:51 AM
Last Updated : 17 Oct 2020 11:51 AM
அபுதாபியில் நேற்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2020-ன் 32வது டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை இந்தியன்ஸ் அணி தனது கருணையற்ற ஆக்ரோஷ அணுகுமுறையில் சரணடையச் செய்தது.
கொல்கத்தா 148/5 என்று வந்ததே கமின்ஸ் அடித்த அரைசதத்தினால். மும்பை இந்தியன்ஸ் இந்த இலக்கை 17வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. ஐபிஎல் தொடரில் இந்த ஆட்டம் மகா அறுவையான ஆட்டமாக இருந்தது. ஒருதரப்பான ஆட்டமாகப் போனதால் சோர்வை ஏற்படுத்தும் ஆட்டமாக இருந்தது.
இந்த வீணாகப் போய்க்கொண்டிருக்கும் கொல்கத்தா அணியை வீழ்த்தி விட்டு சோர்வான ஆட்டத்துக்குப் பிறகு ‘கருணையற்ற தங்கள் ஆட்டம் தொடரும்’ என்று ரோஹித் கூறுவது என்ன நகைமுரணோ!
இதுவரை 8 போட்டிகளில் ஆடி மும்பை இந்தியன்ஸ் அணி 6-ல் வென்று அட்டவணையில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு ரோஹித் சர்மா கூறியதாவது:
சவாலில் எப்போதும் இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பது முக்கியம். வெற்றிகள் வருகிறது என்பதற்காக அலட்சியப்போக்கு கூடாது, ஏனெனில் இந்த ஆட்டம் வேடிக்கையானது, எப்படி வேண்டுமானாலும் எப்போதும் வேண்டுமானாலும் மாறிவிடக்கூடியது. எனவே ஓட்டிக்கொண்டேயிருக்க வேண்டும், பெடலிலிருந்து காலை எடுத்து விடக்கூடாது.
நாங்கள் இப்படித்தான், கருணையற்ற விதத்தில்தான் ஆடுவோம், ஆம் நாங்கள் கடும் வேட்கையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
6 மாதங்களாக கிரிக்கெட் இல்லாமல் வந்துள்ளார்களா, இங்கு வந்தவுடன் அவர்கள் தங்களை இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
4 போட்டிகளில் 4ஐயும் வென்ற பிறகு அடுத்த போட்டி சவால் நிறைந்ததுதான், ஆனால் நாங்கள் நன்றாகத் தயாராகியிருந்தோம். தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமாக ஆடினோம்.
என்றார் ரோஹித் சர்மா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT