Published : 15 Oct 2020 03:23 PM
Last Updated : 15 Oct 2020 03:23 PM
கிரிக்கெட்டில் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு வந்து பார்க்கத் தொடங்கியதில் ‘புல்ஷாட்’ ஆடுவதில் ரிக்கி பாண்டிங் போன்ற சிறந்த ஒரு பேட்ஸ்மேனை நாம் பார்க்க முடியாது.
ரிச்சர்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஹெய்டன், லாங்கர், சச்சின், இன்சமாம் உல்ஹக் ஆகியோர் இருந்தாலும் ரிக்கி பாண்டிங்கின் உடல் உந்துதல் ஷார்ட் பிட்ச் என்றால் புல் ஷாட் என்பதில் ஒரு தனிரகமாகத் திகழ்ந்தார் என்பதையே நமக்குக் காட்டுகிறது.
அவர் இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஷிம்ரன் ஹெட்மையர் வாழ்க்கையில் கிடைக்காத ’துரோணாச்சாரியார்’ இப்போது டெல்லி அணியில் அவருக்கு ரிக்கி பாண்டிங் மூலம் வாய்த்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அன்று 24 பந்துகளில் 45 ரன்களை வெளுத்துக் கட்டி ஐபிஎல் 2020-ல் தன் அடிதடி பார்முக்குத் திரும்பினார் ஹெட்மையர். இந்தப் போட்டியில் 5 சிக்சர்கள் அடித்த ஹெட்மையர் விளாசிய முதல் சிக்ஸ், ஆண்ட்ரூ டை பந்தில் அடித்த துல்லிய புல் ஷாட் ஆகும்.
அவருக்கு இதுவரை புல் ஷாட் அவ்வளவு சரியாக வந்ததில்லை, இப்போது ரிக்கி பாண்டிங் இவருடன் பணியாற்றி புல்ஷாட்டை எப்படி ஆடுவது என்பதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஹெட்மையர் ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும்போது, “ரிக்கியுடன் இருப்பது அருமையானது. பாண்டிங் இப்போது எனக்கு புல்ஷாட் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில போட்டிகளாக எனக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங் வீசி வருகிறார்கள்.
இப்போது ரிக்கி பாண்டிங் என் புல்ஷாட்டை சரி செய்துள்ளார், இனி ஷார்ட் பிட்ச் வீசினால் சிக்ஸ்தான், இன்னிங்ஸுக்கு ஒரு சிக்ஸாவது இனி புல்ஷாட்டில் அடிப்பேன்.
மேலும் ஆட்டத்தை பினிஷிங் செய்யும் கலையையும் அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு என்னை இறக்கி விடும் ரோலுக்கு நான் இன்னும் பழகவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் இந்த ரோலுக்கு பழகிக்கொள்வேன். இப்போது பினிஷிங் ரோலில் ‘ஒர்க்’ செய்து கொண்டிருக்கிறேன். ” என்றார் ஹெட்மையர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT