Published : 10 Oct 2020 07:52 AM
Last Updated : 10 Oct 2020 07:52 AM
பிசிசிஐ எப்போதும் இப்படித்தான் ‘மைண்ட் கேம்’ ஆடுவார்கள், தொடருக்கு முன்பாக ஏற்க முடியாத கோரிக்கையை வைப்பார்கள் இந்த முறை விராட் கோலிக்காக அவர்கள் வைக்கும் கோரிக்கையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்கக் கூடாது என்று ஆலன் பார்டர் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு டெஸ்ட் போட்டியை ஜனவரி 7ம் தேதிக்கு மாற்றுமாறு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதையடுத்து ஆலன் பார்டர் இதனை ஏற்கக் கூடாது என்று கூறுகிறார்.
பாக்சிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் நடத்துவது என்பது அங்கு திருவிழா போன்றது. இம்முறை மைதானத்துக்கு ரசிகர்கள் அனுமதியில்லா விட்டாலும் பெரிய அளவில் தொலைக்காட்சி பார்வையாளர்களை எதிர்பார்க்கின்றனர், இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை தள்ளி வைத்தால் வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல புத்தாண்டு டெஸ்ட் போட்டி தள்ளிப்போனால் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு குழந்தை பிறக்கப்போவதையடுத்து அவர் தன் குழந்தையை பார்த்துவர சரியாக இருக்கும் என்பதே பிசிசிஐயின் திட்டம் என்று ஆலன் பார்டர் சாடியுள்ளார்.
இந்நிலையில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸிற்கு ஆலன் பார்டர் கூறும்போது, “இது பேச்சுவார்த்தை செய்ய கூடிய விஷயமல்ல. கோவிட் 19-னால் தள்ளி வைக்க வேண்டும் என்பது நியாயம்.
ஆனால் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிக்கும் இடையே ஓய்வு வேண்டும் என்று கேட்பது முட்டாள்தனமானது.
பிசிசிஐ தன்னை ஏதோ உலக கிரிக்கெட்டின் பலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. நிதிபலம் ரீதியாக அது உண்மையும் கூட. இதுதான் வழக்கமாக ஆடப்படும் தேதிகள். இப்போது இதைப்பேசி மாற்றுவது என்ற கோரிக்கைக்கு அடிபணியக்கூடாது.
ஏற்கெனவே பிரிஸ்பனில் முதல் டெஸ்ட் போட்டியை ஆட விரும்பவில்லை என்று கூறியதற்காக அவர்கள் விருப்பப்படி மாற்றப்பட்டது. பிரிஸ்பன் டெஸ்ட்தான் முதல் டெஸ்ட், இதுதான் வழக்கம்.
எங்கு, எப்போது போட்டிகளை ஆட வேண்டும் என்ற விஷயத்தில் விட்டுக் கொடுத்தல் கூடாது ஒரு இஞ்ச் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது.” என்று காட்டமாக தெரிவித்துள்ளார் பார்டர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT